Home /News /tamil-nadu /

உத்தரப்பிரதேசத்தில் எம்.எல்.ஏ. ஆன துப்புரவு பணியாளர்... செயலில் காட்டிய பாஜக - அண்ணாமலை ட்விட்டர் பதிவு

உத்தரப்பிரதேசத்தில் எம்.எல்.ஏ. ஆன துப்புரவு பணியாளர்... செயலில் காட்டிய பாஜக - அண்ணாமலை ட்விட்டர் பதிவு

 அண்ணாமலை

அண்ணாமலை

தமிழக பாஜக தலைவர் தனது ட்விட்டர் பக்கத்தில் உத்தரபிரதேச மாநிலத்தில் துப்புரவு பணியாளர் ஒருவர் சட்டமன்ற உறுப்பினரான வீடியோவை பகிர்ந்துள்ளார்.

    உத்தரபிரதேச மாநிலத்தில் துப்புரவு பணியாளர் ஒருவர் சட்டமன்ற உறுப்பினரான வீடியோ ஒன்றை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    உத்தரப் பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், கோவா, உத்தரகாண்ட் ஆகிய ஐந்து மாநிலங்களில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 4 மாநிலங்களில் பா.ஜ.க வெற்றிகரமான வெற்றியை பதிவு செய்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றுள்ளது. ஐந்து மாநிலங்களிலும் காங்கிரஸ் பெரும் தோல்வியைச் சந்தித்துள்ளது. பிரதான எதிர்கட்சியாக உள்ள காங்கிரஸ் கட்சி இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நிரந்தரத் தலைவர் இல்லாமல் இருப்பதே இந்தத் தோல்விக்கு காரணம் என்று அரசியல் வல்லுநர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.

    வெற்றி பெற்ற உற்சாகத்தோடு தமிழக பாஜக தலைவர் தனது ட்விட்டர் பக்கத்தில் உத்தரபிரதேச மாநிலத்தில் துப்புரவு பணியாளர் ஒருவர் சட்டமன்ற உறுப்பினரான வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் பேசிய வெற்றி பெற்ற பாஜக உறுப்பினர் சஃபாய் கரம்சாரி (Safai Karamchari), பிரதமர் மோடி அவர்கள் தூய்மை பணியாளருக்கு எவ்வளவு பெரிய மதிப்பை அளித்துள்ளார். தூய்மை பணியாளர்கள் குறைந்தவர்கள் இல்லை. சமூகத்திற்கான குப்பைகளை சுத்தம் செய்கின்றவர்கள் உயர்ந்தவர்களே!. நாட்டின் பிரதம மந்திரி இவ்வாறு தூய்மை பணியாளர்களுக்கு மதிப்பளிப்பதும் , பாஜக தூய்மை பணியாளர்களுக்கு சீட் வழங்குவதன் மூலம் ஒவ்வொரு தூய்மை பணியாளருக்கும் அங்கீகாரம் வழங்க வேண்டும். நான் மக்களுக்கு சேவை செய்ய விரும்புகின்றேன்.

    கொரோனா காலத்தில் நான் ஒரு வண்டியில் பூரி , காய்கறி வைத்து ரிட்ஷா காரர்களை தேடி சென்றேன். ரிட்ஷா ஓட்டுபவர்கள் கொரோனா காலத்தில் உணவுக்கு மிகுந்த கஷ்ட பட்டனர். பீகாரில் இருந்து வந்த பலர் சந்த் கபீர் பகுதியில் இருக்கின்றனர். எனக்கு சீட் வழங்கப்பட்டதுடன் ஆனந்த கண்ணீருடன் பலர் என்னுடன் பேசினர். அண்ணா! அட அண்ணா! நீங்கள் உயர்ந்து விட்டிர்கள் என பேசினர். இப்படிப்பட்ட மக்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை.

     

     



     

    சட்டமன்றத் தேர்தலில் வெல்லும் சக்தி அவர்களிடம் உள்ளது. நான் வென்ற போது என்னை அவர்கள் நேரில் சந்தித்தனர். கட்டி அணைத்து கொண்டனர். ரிக்சா ஓட்டுநர்கள் மிகுந்த மகிழ்ச்சி அவர்களுக்கு 3 மாதங்கள் யாரும் எங்களை கண்டுகொள்ளாத போது எங்களுக்கு நீங்க உணவளித்தீர்கள் என கூறினார்கள். பாரதீய ஜானதா கட்சி மற்றும் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தால் மட்டுமே இது நடந்துள்ளது என கூறியுள்ளார் .

    இது குறித்த பதிவில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பாஜக சார்பில் உ.பி.யில் சகோதரர் சஃபாய் கரம்சாரி போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டு எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதுதான் உண்மையான சமூக நீதி என்பதன் பொருள். பாஜக இதை செயலில் காட்டக்கூடிய ஒரே கட்சி, திமுக போன்று உதட்டளவில் மட்டும் அல்ல என பதிவிட்டுள்ளார்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Annamalai, BJP

    அடுத்த செய்தி