ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

'தமிழ் இசையையும், தேச பக்தியையும் திரையில் வளர்த்தவர் கே.வி.மகாதேவன்' - அண்ணாமலை

'தமிழ் இசையையும், தேச பக்தியையும் திரையில் வளர்த்தவர் கே.வி.மகாதேவன்' - அண்ணாமலை

அண்ணாமலை

அண்ணாமலை

தமிழ் இசையையும் தேச பக்தியையும் தெய்வ பக்தியையும் திரைத்துறையில் வளர்த்த இசை மேதை கே.வி.மகாதேவன் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  தமிழ் இசையையும் தேச பக்தியையும், தெய்வ பக்தியையும் திரைத்துறையில் வளர்த்த இசை மேதை கே.வி.மகாதேவன் (1918-2001) அவர்களின் பிறந்த தினம் இன்று அவரது புனித நினைவையும் அவரது பண்பாட்டு பங்களிப்பையும் பாரதிய ஜனதா கட்சி போற்றுகிறது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது இணையதள பக்கமான ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

  கே. வி. மகாதேவன் (K.V.Mahadevan) ஒரு தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் மொத்தம் 1500க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவர் பிறந்த தினம் இன்று

  மொத்தமாக 218 தமிழ்ப் படங்களுக்கு இசையமைத்தார். 1942 இல் மனோன்மணி என்ற திரைப்படத்துக்கு முதன்முதலில் இசையமைத்த இவர் 1990 இல் முருகனே என்ற படத்துடன் தன் இசையமைப்புப் பணிகளை நிறுத்திக்கொண்டார். தமிழ் திரைத்துறைக்கு தனது வாழ்வில் பெரும் பகுதியை செலவிட்ட இசை மேதை கே.வி.மகாதேவன் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை , நாகர்கோவிலில் பிறந்து தமிழ் இசையையும் தேச பக்தியையும் தெய்வ பக்தியையும் திரைத்துறையில் வளர்த்த இசை மேதை கே.வி.மகாதேவன் (1918-2001) அவர்களின் பிறந்த தினம் இன்று. அவரது புனித நினைவையும் அவரது பண்பாட்டு பங்களிப்பையும் பாரதீய ஜனதா கட்சி  போற்றுகிறது.

  மனோன்மணி தொடங்கி திருவிளையாடல், சரஸ்வதி சபதம் என பல நல்ல திரைப்படங்களில் அவரது இசை பங்களிப்பு என்றும் நிலை நிற்கும் என பதிவிட்டுள்ளார்.

  மேலும், இன்று ஐன்ஸ்டைன் பிறந்த தினம் என்பதால் அவருக்கும் வாழ்த்து பதிவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் உலகின் மிகச் சிறந்த இயற்பியலாளர் மட்டுமல்ல உலக சமாதானத்தை விரும்பியவர். மகாத்மா காந்தி மீது அளவு கடந்த மரியாதை கொண்டவர். அவரது பிறந்த தினமான (14 மார்ச் 1879) இன்று எனவும் பதிவிட்டுள்ளார்.

  Published by:Sankaravadivoo G
  First published:

  Tags: Annamalai, BJP