• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தயாநிதி மாறன் பற்றிய எல்லா விஷயங்களும் எங்களுக்குத் தெரியும் - அண்ணாமலை

தயாநிதி மாறன் பற்றிய எல்லா விஷயங்களும் எங்களுக்குத் தெரியும் - அண்ணாமலை

அண்ணாமலை

அண்ணாமலை

மேகதாதுவில் கர்நாடகாவால் நிச்சயம் அணை கட்ட முடியாது.

  • Share this:
    கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சாவூரில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் பேசிய பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை, தயாநிதி மாறன் எங்களைப் பற்றிய மீண்டும் பேசினால், அவர்களின் எல்லாம் விஷயமும் சந்திக்கு வரும் என்று கூறினார்.

    மேகதாதுவில் அணை கட்ட முயலும் கர்நாடக பாஜக அரசை கண்டித்து தமிழக பாஜக சார்பில் உண்ணாவிரத போராட்டம் தஞ்சாவூர் ஜூபிடர் தியேட்டர் - பனகல் பில்டிங் அருகில் தடையை மீறி நடைபெற்று வருகிறது.

    பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெறும் இந்த போராட்டத்தில், தமிழக பாஜக இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், முன்னாள் மாநிலத் தலைவர் சி.பி ராதாகிருஷ்ணன், முன்னாள் அகில இந்திய பாஜக செயலாளர் எச்.ராஜா, தமிழ்நாடு சட்டமன்ற பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்,  உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டுள்ளனர். அத்துடன் விவசாயிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர். இந்த போராட்டம் மாலை 5 மணி வரையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், கூட்டத்தில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “இந்த போராட்டம் குறித்து அரசியல் தலைவர்கள் விமர்சனம் செய்கிறார்கள். குறிப்பாக, மையம் என்று கட்சி ஆரம்பித்து விட்டு மையம் இல்லாமல் செயல்படும் ஒருவர் (கமல்), இரண்டு பொம்மைகள் என்கிறார். நடிப்பின் உச்சகட்டம் அரசியல் என்பதை புரிந்து கமல் அரசியலுக்கு வந்துள்ளார். படப்பிடிப்பு போல், தேர்தல் பிரச்சாரம் செய்தார்.



    சாராயம் விற்கும் அமைச்சரை பக்கத்திலும் வேளாண்மை அமைச்சரை தூரத்திலும் வைத்திருக்கும் அரசு இங்குள்ளது. உண்ணாவிரதப் போராட்டத்தை காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கேவலமாக, இழிவாக பேசியுள்ளார். அவர் உடனே பதவி விலக வேண்டும்.

    Must Read : மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு - தடையை மீறி பாஜக உண்ணாவிரதப் போராட்டம்

    அரசியலில் மனசாட்சி இருந்தால் மட்டுமே மக்களிடம் சாட்சியாக இருக்க வேண்டும். இன்னொரு முறை தயாநிதி மாறன் எங்களைப் பற்றி பேசினால், அவர்களின் எல்லாம் விஷயமும் சந்திக்கு வரும். உங்களைப் பற்றி எல்லாமும் எங்களுக்குத் தெரியும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    தற்போது நடைபெறும் போராட்டம் கர்நாடக அரசை ஒட்டு மொத்தமாக எதிர்த்து நடைபெறுகிறது. அரசை மட்டுமல்ல அங்குள்ள காங்கிரஸ், ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளையும் எதிர்த்துதான் இந்த போராட்டம். நிச்சயம் அவர்களால் அணை கட்ட முடியாது. சட்டம் அப்படி உள்ளது. காவிரி மேலாண்மை ஆணையம், மத்திய நீர்வளத்துறை அச்சகம் ஆகியவை அணை கட்ட முடியாது என்று கூறியுள்ளது” என்றார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: