Home /News /tamil-nadu /

பாஜக தொண்டர்களை சீண்டியது ஏன்: பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு அண்ணாமலை கேள்வி

பாஜக தொண்டர்களை சீண்டியது ஏன்: பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு அண்ணாமலை கேள்வி

பாஜக தலைவர் அண்ணாமலை

பாஜக தலைவர் அண்ணாமலை

BJP Annamalai : 'நான் வன்முறையை கையில் எடுக்கக் கூடிய கட்சியை நடத்தவில்லை' - அண்ணாமலை

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    மதுரை மக்கள் தங்களை யாராவது சீண்டினால் பொறுத்துக்கொண்டு இருக்க மாட்டார்கள். என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

    மதுரை மாநகர் பாஜக தலைவர் டாக்டர் சரவணன், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். முன்னதாக இது குறித்து சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பி.டி.ஆர் நம்முடைய காஷ்மீரிலே நாட்டிற்காக வீர மரணம் அடைந்த லக்ஷ்மணன் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக வந்திருக்கின்றார். அதே இடத்திலே பாரதிய ஜனதா கட்சித் தொண்டர்களும் உள்ளனர். பாரதிய ஜனதா கட்சி அந்த இடத்தில் இருந்து வெளியே செல்ல வேண்டும். யாரும் உள்ளே வரக்கூடாது.

    நீங்கள் அஞ்சலி செலுத்துவதற்கு தகுதி அற்றவர்கள் என்ற வார்த்தையை பயன்படுத்தி உள்ளனர். இதனை பாஜக தொண்டனால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். நான் வன்முறையை கையில் எடுக்கக் கூடிய கட்சியை நடத்தவில்லை. தொண்டர்கள் யாருக்கும் வன்முறையை கையில் எடுக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கப் போவதும் கிடையாது. நமது கட்சி ஆழமான தேசிய கலாச்சாரத்தின் அடிப்படையில் இருக்கக் கூடிய கட்சி.

    ALSO READ |  "செருப்பை வீசிய சிண்ட்ரெல்லா.. பத்திரமா இருக்கு வந்து வாங்கிட்டு போகலாம்.." அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

    மதுரை மக்கள் தங்களை யாராவது சீண்டினால் பொறுத்துக்கொண்டு இருக்க மாட்டார்கள். இதிலே பாஜக தொண்டர்களை ஏன் சீண்டி பார்க்க வேண்டும். எதற்காக நீங்கள் தகுதி அற்றவர்கள் என சொல்ல வேண்டும்.

     



     

    இறுதியாக அமைச்சரும் மதுரை சார்ந்தவர் தானே எனும் கேள்விக்கு பதிலளித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர் மதுரைக் காரரா இல்லை அமெரிக்க காரரா என அவரிடம் தான் கேட்க வேண்டும் என நகைச்சுவையாக பதில் அளித்தார்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Annamalai, BJP

    அடுத்த செய்தி