• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • திமுக தொடர்ந்து வன்முறையை கடைபிடித்து வருகின்றது - அண்ணாமலை குற்றச்சாட்டு

திமுக தொடர்ந்து வன்முறையை கடைபிடித்து வருகின்றது - அண்ணாமலை குற்றச்சாட்டு

அண்ணாமலை

அண்ணாமலை

திமுகவினர் தொடர்ந்து வன்முறையை கடைபிடித்து வந்தால் பாஜகவினர் பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள்...

  • Share this:
    அரவக்குறிச்சி தொகுதியில் பாஜகவின் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது திமுகவினர் நடத்திய தாக்குதலில் இருவர் காயமடைந்தாக சொல்லப்படும் நிலையில்,  காயமடைந்து தனியார் மருத்துவ சிகிச்சை பெற்றுவருபவர்களை பாஜக துணைத் தலைவரும் அரவக்குறிச்சி வேட்பாளருமான அண்ணாமலை நேரில் பார்த்து ஆறுதல் கூறினார்.

    கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதியில் பாஜக சார்பில் அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து திமுக சார்பில் இளங்கோவன் போட்டியிடுகிறார்.

    நேற்று, பாஜக சார்பில் புன்னம் சத்திரம் பகுதியில் அண்ணாமலை உள்ளிட்டோர் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் கனிமொழி பரப்புரையை முடித்துக் கொண்டு சென்ற பிறகு திமுகவினர் பாஜகவை சேர்ந்த வாகன ஓட்டுனர் பாலமுருகன் மற்றும் கார்த்தி என்பவரை தாக்கியதாகக் கூறப்படுகின்றது.

    இதையடுத்து தாக்குதலுக்கு உள்ளான இருவரும் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இரவு பாஜக வேட்பாளர் அண்ணாமலை தாக்குதலில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் இருவரையும் நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.

    அப்போது, கடந்த சில தினங்களுக்கு முன்னர் திமுக-அதிமுக இடையே ஏற்பட்ட மோதலில் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அதிமுகவை சேர்ந்தவர்களையும்  அண்ணாமலை நேரில் பார்த்து ஆறுதல் கூறினார்.

    பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “திமுகவினர் தொடர்ந்து வன்முறையை கடைபிடித்து வந்தால் பாஜகவினர் பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள் என்றும் இது குறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளோம். திமுக தொடர்ந்து வன்முறையை கடைபிடித்து வருகின்றது.

    Must Read : தமிழகத்தில் 50 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் - பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு

     

    செந்தில் பாலாஜிக்கு அரவக்குறிச்சி மற்றும் கரூர் தொகுதியில்  இதுதான் கடைசி தேர்தல் இனிமேல் அவர் வேறு தொகுதியை பார்த்து செல்ல வேண்டும்” என கூறினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: