Home /News /tamil-nadu /

தமிழக பாஜக நிர்வாகிகள் மாற்றம்... புதிய மாவட்ட தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள் பட்டியல் வெளியீடு

தமிழக பாஜக நிர்வாகிகள் மாற்றம்... புதிய மாவட்ட தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள் பட்டியல் வெளியீடு

கமலாலயம்

கமலாலயம்

தமிழக பாஜகவின் புதிய மாவட்ட தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.  59 மாவட்ட தலைவர்கள் , 20 மாநில செயற்குழு உறுப்பினர் ஆகியோரது பெயர்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன. 

    தமிழக பாஜகவின் புதிய மாவட்ட தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

    பாஜகவின் நிர்வாகிகள் மாற்றம் ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கும் நடைபெறும். அந்த வகையில் 400க்கும் மேற்பட்ட பொறுப்புகள் மீண்டும் நியமனம் செய்ய தீவிர ஆலோசனை நடைபெற்று வந்தது. அதன் அடிப்படையில் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், தற்போது தமிழக பாஜகவின் புதிய மாவட்ட தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.  59 மாவட்ட தலைவர்கள் , 20 மாநில செயற்குழு உறுப்பினர் ஆகியோரது பெயர்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன.  விரைவில் மாநில துணைத் தலைவர்கள் பட்டியலிலும் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனிடையே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்குள்ள சீதை கோவிலில் தரிசனம் மேற்கொண்டார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், இந்தியா மற்றும் இலங்கையின் வரலாறு மற்றும் நாகரீகம் ஒரே நேர்கோட்டில் பயணித்துள்ளது. கொழும்பிலிருந்து 182 கிமீ தொலைவில் உள்ள நுவேரா எலியா மாவட்டத்தில் உள்ள சீதா எலியாவில் உள்ள சீதை அம்மன் கோவில் இதை உறுதிப்படுத்தியது. இங்கு தான் சீதா மாதாவை ராவணன் சிறைபிடித்து அடைத்தார்.

    மேலும் படிக்க: தமிழகத்தில் 99% மருத்துவமனைகளில் தீயணைப்பு பாதுகாப்பு விதி மீறல்... ஆய்வுக்குழு அதிர்ச்சி தகவல்


    பின்னர் இவ்விடத்திலிருந்து பகவான் அனுமன் சீதையைக் காப்பாற்றினார். ராமர், சீதை, லக்ஷ்மன் மற்றும் அனுமனின் சிலைகள் கொண்ட இந்த அழகிய கோயில் பல ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. மலையக தமிழர்கள் என்று அழைக்கப்படும் இந்திய வம்சாவளி தமிழர்களால் இந்த கோவில் நிர்வகிக்கப்படுகிறது!” என்று பதிவிட்டுள்ளார்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Annamalai, BJP

    அடுத்த செய்தி