பக்தர்களின் உண்டியல் காணிக்கை இறைவனுக்கும் கோயில் வளர்ச்சிக்கும் மட்டுமே செலவிடப்பட வேண்டும் மாறாக அதிகாரிகளின் மிக்சர் செலவிற்கு அல்ல என்று பாஜக தலைவர் அண்ணாமலை காட்டமாக பேசியுள்ளார்.
திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “திருச்செந்தூரில், 5,309 மாடுகள் காணாமல் போனதை அமைச்சர் சேகர் பாபு மறுக்க முடியுமா? அறநிலையத்துறையின் உள்தணிக்கையில் ஏறத்தாழ, 15 லட்சம் பில்களுக்கு, 1,302 கோடி ரூபாய்க்கு சிக்கல் உள்ளது என்பதை அவர் மறுப்பாரா? அல்லது, அதனை இல்லை என்று அவர் தெளிவுப் படுத்துவாரா?” என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், நாங்கள் ஆதாரப்பூர்வமாக கேள்விகளை கொடுத்துள்ளோம். அதற்குரிய விளக்கத்தை அமைச்சர் அளிக்க வேண்டியதுதான் அமைச்சராக இருப்பவருக்கு அழகு, இந்து சமய அறநிலையத்துறை வருமானத்தில், 12 சதவீதம் நிர்வாகச் செலவினத்திற்கும் 4 சதவீதம் தணிக்கை செலவிற்கும் செல்கிறது என குற்றச்சாட்டியுள்ள அண்ணாமலை அதிகாரிகள் சாப்பிடும் மிக்சர் செலவிற்கு கூட கோயில் உண்டியலில் இருந்துதான் பணம் எடுக்கப்பட்டு செலவிடப்பட்டுள்ளதாக கூறினார்.
ஒரு அதிகாரியின் டாய்லெட் செலவு கூட கோயில் உண்டியல் பணத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் கோயில் உண்டியலில் செலுத்தும் காணிக்கை இறைவனுக்கும் கோயில் வளர்ச்சிக்கு மட்டுமே செலவிடப்பட வேண்டும்.மாறாக, அதிகாரிகள் சாப்பிடும் மிக்சர் உள்ளிட்ட செலவினங்களுக்காக செலவிடக்கூடாது என அண்ணாமலை தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Annamalai, Bjp state president, Hindu Endorsements Dept, Minister Sekar Babu