Home /News /tamil-nadu /

காயத்ரி ரகுராமுக்கு பாஜகவில் புதிய பதவி: அண்ணாமலை அறிவிப்பு

காயத்ரி ரகுராமுக்கு பாஜகவில் புதிய பதவி: அண்ணாமலை அறிவிப்பு

காயத்ரி ரகுராம் - அண்ணாமலை

காயத்ரி ரகுராம் - அண்ணாமலை

பாஜகவின் கலாச்சார பிரிவு மாநில தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட காயத்ரி ரகுராமை வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவராக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நியமித்துள்ளார்.

    தமிழக பாஜகவின்  வெளிநாடு & அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு தலைவராக நடிகையும் நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம் நியமிக்கப்பட்டுள்ளார்.

    தமிழக பாஜகவின்  கலை, கலாச்சார பிரிவு மாநில தலைவராக  காயத்ரி ரகுராம் இருந்துவந்தார். இந்நிலையில், கடந்த மாதம் பாஜக மாநில நிர்வாகிகளின் புதிய பட்டியலை மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். அதில், கலாச்சார பிரிவு மாநில தலைவராக இருந்த காயத்ரி ரகுராம்  நீக்கம் செய்யப்பட்டு பெப்சி சிவக்குமார் நியமனம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.  இதையடுத்து தனது ஒரே தலைவர் பிரதமர் நரேந்திர மோடிதான் என காயத்ரி ரகுராம் ட்விட் செய்திருந்தார்.

    அவரது ட்விட்டர் பதிவுக்கு பின்னுட்டம் அளித்த ஒரு நபர்,  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு பின்பு அதிகம் விமர்சிக்கப்பட்டவர் நீங்கள் தான். அதனால், உங்களுக்கு ஒரு நாள் வரும். அதுவரை பொறுமையுடன் இருக்கவும் என்று ஒரு பதிவர் தெரிவித்திருந்தார்.

    அதற்கு பதிலளித்த காயத்ரி ரகுராமன், மிக்க நன்றி ஜி, கடந்த 8 வருடமாக உழைத்து வருகிறேன். தொடர்ந்து, பாஜகவுக்காக உழைப்பேன். மனம் தளர்ந்துவிட மாட்டேன் என்று அவர் தெரிவித்திருந்தார். தனது பதவி பறிக்கப்பட்டது தொடர்பாக அவர் அதிருப்தியில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

    இதையும் படிங்க: தமிழகத்தின் பல்வேறு மாவட்ட ஆட்சியர்களின் பெயரில் மோசடி.. ராஜஸ்தான் கும்பல் அட்டகாசம்..


    இந்நிலையில், தமிழக பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநிலத் தலைவராக காயத்ரி ரகுராமை நியமித்து அண்ணாமலை அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Annamalai, BJP, Gayathri Raghuram

    அடுத்த செய்தி