Home /News /tamil-nadu /

'தொண்டர்கள் உணர்ச்சி வசப்பட வேண்டாம்' - அண்ணாமலை வேண்டுகோள்

'தொண்டர்கள் உணர்ச்சி வசப்பட வேண்டாம்' - அண்ணாமலை வேண்டுகோள்

அண்ணாமலை

அண்ணாமலை

BJP Annamalai : "அமைச்சர் பேசியது தவறு. அதை மக்கள் மன்றத்தில் எடுத்து சென்று கேள்வி கேட்க வேண்டும்" - அண்ணாமலை

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    தொண்டர்கள் உணர்ச்சி வசப்பட வேண்டாம், அனைத்திற்கும் உணர்ச்சி வசப்படும் கட்சி பாஜக கிடையாது என  அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

    ராமேஸ்வரத்தில் மீனவர்களுடன் 75 ஆவது சுதந்திர தின விழாவை கொண்டாட பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை ராமநாதபுரம் வந்தார். இந்நிலையில் இன்று காலை ராமேஸ்வரம் ராமநாதசாமியை அண்ணாமலை தரிசனம் செய்தார்.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நமது சித்தாந்தம் என்பது எந்த தருணத்திலும் அமைதியை விரும்ப கூடிய கட்சி. கலவரத்தை விரும்பக் கூடிய கட்சி கிடையாது. அதே நேரத்தில் நேற்றைய தினம் அமைச்சர் பொதுமக்கள், தொண்டர்கள் மத்தியில் பேசிய வார்த்தைகளை கூட ஏற்றுக்கொள்ள முடியாது.

    அது மக்கள் மன்றத்தில் கேள்வி கேட்கணும். அதற்காக தொண்டர்கள் அதனை செய்துள்ளார்கள். அதனை ஏற்றுக்கொண்டீர்களா என்றால் நிச்சயமாக அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. நேற்றே சொன்னோம் வலியுறுத்துகின்றோம் யாரும் இதே போன்று பண்ணாதீங்க.

    அதே நேரத்தில் நேற்று மதுரை மாவட்ட தலைவர் எனது தாய் கழகத்திற்கு நான் செல்கின்றேன் என கூறுவது அவரின் முடிவு அது. அவருடைய உரிமை அதனை தடுத்து யாரும் நீங்கள் இருங்கள் என சொல்ல முடியாது. அது அவருடைய முடிவு. கட்சியை பொறுத்தவரை அடுத்த தலைவர் தயாராக இருப்பார். அவர் கட்சியை தனது தோலின் மீது எடுத்து சுமக்க தயாராக இருப்பார்.

    நேற்றைய தினம் இது நடந்திருக்க கூடாது. நான் நேற்றைய தினம் சற்று முன்னர் சென்றிருந்தால் இதனை நன்றாக கையாண்டிருக்கலாம். நான் போறதுக்கு முன்னாடி சண்டை எல்லாம் முடிஞ்சு கோபமான மன நிலையில் இருந்தார்கள். மேலும் நான் செல்வதை காவல்துறைக்கும் சொல்லவில்லை. காரணம் திருச்சியில் இருந்து சிவகங்கை வர வேண்டிய நிகழ்ச்சி அதன் பின்பு அங்கிருந்து மாற்றி மதுரை போக வேண்டிய நிலைமை.
    காவல்துறை நண்பர்களுக்கு கடைசி நேரத்தில் சொல்ல வேண்டிய கட்டாயம்.

    ALSO READ | மின்சார சட்டத் திருத்தத்தால் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படாது - மத்திய மின்சாரத்துறை செயலாளர் அலோக் குமார் விளக்கம்

    அப்படி இருக்கும் போது முன்னரே தெரிவித்திருந்தால் இன்னும் அவர்கள் பாதுகாப்பு பலப்படுத்தி இருக்கலாம். நேற்று நடந்தது கட்சியின் சிந்தாந்தத்திற்கு எதிரானது. அதே நேரத்தில் காவல் துறை கைது செய்திருக்கும் நபர்களில் பலர் அறியாமை நபர்கள் (Innocent People) உள்ளனர். அவர்கள் அந்த இடத்தில் இல்லாதவர்கள். அவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக திருச்சியில் இருந்து வந்து ஆர்மிகாரர்கள் ஜீப்பை ரெடி செய்து ரிப்பேர் ஆகி விட்டது அதனை ஒரு மணி நேரம் ஸ்டெப்னி மாத்தி ஆர்மி காரர்களை அனுப்பி வைத்தவர்களையும் காவல் துறையினர் கைது செய்து உள்ளனர்.

    அதனால் என்னை பொறுத்தவரை தவறு யார் செய்திருந்தாலும் சட்டம் வந்து தன் கடமையை செய்யட்டும். அதே நேரத்தில் கட்சித் தொண்டர்களை நல்வழி படுத்தி, அவர்களை நேர்கோட்டு பாதையில் செல்ல வைக்க வேண்டிய கடமையும் கட்சிக்கு உள்ளது. அதனால் தொண்டர்களுக்கு கூறுகின்றேன்,  உணர்ச்சி வசப்பட வேண்டாம். அனைத்திற்கும் உணர்ச்சி வசப்படும் கட்சி பாஜக கிடையாது எனத் தெரிவித்தார்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Annamalai, BJP, Minister Palanivel Thiagarajan

    அடுத்த செய்தி