திமுக மற்றும் கரூர் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணியை வன்மையாக கண்டிப்பதாக அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜக வேட்பாளர் அண்ணாமலை தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார். அரவக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சுவர் விளம்பரங்களில் மோடியின் ஆசிபெற்ற சின்னம், ஜெயலலிதாவின் ஆசி பெற்ற சின்னம் தாமரை என சுவர் விளம்பரங்கள் செய்திருந்தனர்.
அதில் மோடி பெயர் மற்றும் பல்வேறு பகுதிகளில் அழிக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் புகைப்படம் பரவியது. இந்நிலையில் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் ஜோதிமணி தனது முகநூல் பக்கத்தில், தமிழகத்தில் பாஜக வேட்பாளர்கள் தங்கள் பிரசுரங்களில் திரு நரேந்திர மோடியின் புகைப்படத்தை போடவே அச்சப்படுகின்றனர். எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுக்கு முன்னுரிமை கொடுக்கின்றனர். தமிழகம் கோபேக்மொடி என்று சொல்வதில் எவ்வித ஆச்சரியமும் இல்லை என பதிவிட்டிருந்தார்.
இது குறித்து நியூஸ் 18 க்கு பேட்டியளித்த
பாஜக வேட்பாளர் அண்ணாமலை, “தொகுதியில் ஒரு சில இடங்களில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் எங்களது சுவர் விளம்பரங்களில்
மோடி ஜி பெயரை அளித்துள்ளதாக தெரிகிறது. இதை கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Must Read : இன்று மாலை 6 மணிக்குள் விளக்கம் அளிக்க ஆ.ராசாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்...
இதை அவர்தான் செய்துள்ளார் என நான் கருதுகிறேன். இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறேன் . இந்த கீழ்த்தரமான அரசியலில் ஈடுபட வேண்டாம் எனவும், கோபேக்மொடி கூறியதற்கு நாங்கள் பொருத்து இருந்தோம். எதற்கும் ஒரு எல்லை உண்டு” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
செய்திளாளர் : தி.கார்த்திகேயன்