ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தமிழை காத்தவர் பிரதமர் மோடி.. தமிழகம் அவருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளது - அண்ணாமலை!

தமிழை காத்தவர் பிரதமர் மோடி.. தமிழகம் அவருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளது - அண்ணாமலை!

மோடி - அண்ணாமலை

மோடி - அண்ணாமலை

தமிழ் மொழியை கட்டாயப் பாடமாகமட்டுமல்ல, பயிற்று மொழியாகவும், அமைத்துத்தந்த பிரதமருக்கு தமிழகம் நன்றிக்கடன் பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தமிழை கட்டாய பாடமாக்கி பயிற்று மொழியாக்கி தமிழை காத்தவர் பிரதமர் மோடி என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

  இந்தியை கட்டாயமாக புகுத்தி இன்னொரு மொழிப்போரைத் திணிக்காதீர் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.  இதற்கு பதிலளிக்கும் வகையில் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

  அதில், பாஜக ஆட்சிக்கு வந்த பிறகுதான் பிரதமர் மோடியால் ஏற்படுத்தப்பட்ட புதிய தேசியக் கல்விக் கொள்கையின் மூலம், தமிழ் கட்டாயப் பாடமாக மாற்றப்பட்டுள்ளது. ஆக தமிழை காத்தவர் நரேந்திரமோடிதான் என குறிப்பிட்டுள்ளார்.

  தமிழை கட்டாயப்பாடமாக்கி பயிற்று மொழியாக்கியவர் பிரதமர் மோடி. சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து தமிழையே படிக்காமல், தமிழ்நாட்டில் பள்ளிகளில் படிக்க முடிந்த இழிவான சூழ்நிலையை மாற்றி, தமிழ் மொழியை கட்டாயப் பாடமாக மட்டுமல்ல, பயிற்று மொழியாகவும், அமைத்துத்தந்த பிரதமருக்கு தமிழகம் என்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Annamalai, BJP, CM MK Stalin, Modi