• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஸ்டாலின் சுயமாக இயங்காததால் ஆபத்தானவர் என எச்.ராஜா விமர்சித்துள்ளார் - அண்ணாமலை பதில்

ஸ்டாலின் சுயமாக இயங்காததால் ஆபத்தானவர் என எச்.ராஜா விமர்சித்துள்ளார் - அண்ணாமலை பதில்

மு.க.ஸ்டாலின், அண்ணாமலை

மு.க.ஸ்டாலின், அண்ணாமலை

ஒரு பலம் வாய்ந்த தலைவராக ஸ்டாலினை நான் பார்க்கவில்லை என பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

  • Share this:
    கருணாநிதி போல் ஸ்டாலின் சுயமாக இயங்கவில்லை என்றும் அவரை பின்னால் இருந்து ஒரு கும்பல் இயக்குவதால் தான் ஸ்டாலின் கருணாநிதியை விட ஆபத்தானவர் என ஹெச்.ராஜா கூறியிருப்பார் என்று தான் கருதுவதாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்

    முன்னாள் முதல்வர் காமராஜரின் 46 வது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள காமராஜரின் நினைவு மண்டபத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர்,’தமிழ்நாட்டு அரசியல் காமராஜர் கொண்டு வந்த வழியில் இருந்து அப்பட்டமாக மாறி இருப்பதை நம்மால் காண முடிகிறது.

    காங்கிரஸின் தலைவர்கள்  சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி பலமுறை சென்னை வந்தனர் ஆனால்  காமராஜர் நினைவிடத்தில் ஒருமுறைகூட அஞ்சலி செலுத்தியதில்லை. இன்று காலை இந்த வழியாக விமானநிலையம் சென்ற முதல்வர் இறங்கி அஞ்சலி செலுத்தவில்லை.

    காமராஜரின்  நினைவிடம் சரியாக பராமரிக்கப்படாமல் உள்ளது.நீங்கள்  செய்யவில்லை என்றால் எங்களிடம் ஒப்படையுங்கள் அடுத்த வருடம் இதே இடத்தில் மாபெரும் மணிமண்டபத்தை கட்டி அவருடைய வாழ்க்கை வரலாற்றை  மக்களுக்கு காட்டுகிறோம். தமிழக அரசு எல்லா தலைவருக்கும் 39 கோடி செலவில் மணிமண்டபம் கட்டுவது ஏற்புடையது அதேபோல் காமராஜர் போல் பெரும் தலைவரை இருட்டடிப்பு செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது என்று குற்றம் சாட்டினார்.

    கருணாநிதியை விட ஸ்டாலின் ஆபத்தானவர் என எச்.ராஜா விமர்சனம் செய்தது குறித்த கேள்விக்கு பதலளித்த அண்ணாமலை, முன்னாள் முதல்வர் கருணாநிதி சுயமாக சிந்தித்து செயல்பட்டார் ஆனால்  ஸ்டாலின்  சுயமாக இயங்கவில்லை என்று சொல்கிறார். ஸ்டாலினை வேறு ஒரு கும்பல் இயக்குவதாக எச்.ராஜா கூறுகிறார்  என்ற அர்த்தத்தில் தான்  நான்  கருதுகிறேன் என்றார்.

    ஒரு பலம் வாய்ந்த தலைவராக ஸ்டாலினை நான் பார்க்கவில்லை.முதல்வரின் காவல்நிலைய  திடீர் ஆய்வு முன் கூட்டியே  ஏற்பாடு செய்த ஆய்வு  என்றும் போட்டோஷாப் செய்துவிட்டு அவர்களே சமூக வலைதளங்களில் பதிவிட்டு  அவர்கள் சொந்த தொலைக்காட்சியில் 100 நாள் சாதனை என்று விளம்பரம் செய்வதை  ஏற்றுக்கொள்ள முடியாது.எதிர்க்கட்சியாக நல்ல வேலை செய்யும் போது  நாங்கள் அரசுக்கு  ஒத்துழைப்பு கொடுப்போம்.பெட்ரோல் டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள்  கொண்டு வர நாங்கள் முயற்சிக்கும்போது மாநில அரசு ஒப்புதல் வழங்க வேண்டும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: