முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ஆ.ராசா விவகாரம்.. திமுக குழப்பத்தில் உள்ளது - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம்

ஆ.ராசா விவகாரம்.. திமுக குழப்பத்தில் உள்ளது - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம்

அண்ணாமலை

அண்ணாமலை

திமுகவினர் மதத்தை வைத்து அரசியல் செய்வதாக அண்ணாமலை குற்றம்சாட்டினார். 

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Madurai, India

ஆ.ராசாவின் பேச்சுக் குறித்து முதலமைச்சர் கருத்து தெரிவிக்காதது, திமுக குழப்பமான சித்தாந்தத்தில் இருப்பதை காட்டுவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா இந்து மதம் குறித்து அண்மையில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அவருக்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அண்ணாமலை, ஆ.ராசா இந்து பெண்களின் மனதை புண்படுத்தும் வகையில் செயல்படுவதாக தெரிவித்தார். இதனை எதிர்த்த பாஜகவினர் மீது, போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக போலி வழக்குப்பதிந்து கைது செய்வதாக கூறினார்.

திமுகவினர் மதத்தை வைத்து அரசியல் செய்வதாகவும், அண்ணாமலை குற்றம்சாட்டினார்.  மேலும், ஆ.ராசாவின் பேச்சை கண்டித்து பாஜக சார்பில் மக்களிடம் கையெழுத்து பெறப்பட்டு வருகிறது. குறிப்பாக அவரின் நாடாளுமன்றத் தொகுதியில் 20 லட்சம் கையெழுத்துகள் பெறப்பட்டு உள்ளன. இவர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் கூறினார்.

இதையும் படிங்க: தமிழகத்தில் போதை பொருள் அதிகமாகிவிட்டது: அன்புமணி ராமதாஸ்

மின் கட்டணம் உயர்வு குறித்து கருத்து தெரிவித்த அண்ணாமலை, மத்திய அரசுதான் கட்டணத்தை உயர்த்த சொன்னதாக சொல்வது மிகப்பெரிய பொய் என்றார். விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாத முதலமைச்சர், ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து சொன்னது போதிய அனுபவம் இல்லை என்பதை காட்டுகிறது என்று விமர்சித்தார்.

First published:

Tags: A Raja, Annamalai, BJP, Madurai