Home /News /tamil-nadu /

அடுத்தவர் சாதனைக்கு அட்ரசை ஒட்டுவதுதான் திராவிட மாடலா? - அண்ணாமலை அறிக்கை

அடுத்தவர் சாதனைக்கு அட்ரசை ஒட்டுவதுதான் திராவிட மாடலா? - அண்ணாமலை அறிக்கை

அண்ணாமலை

அண்ணாமலை

பிரதமர் மோடியின் நடவடிக்கையால், மத்திய அரசு செய்த இந்த சாதனைக்கு, வழக்கம்போல திமுக தனது திராவிட ஸ்டிக்கர் ஒட்டும், வேலையை செய்வது வேடிக்கையாக இருக்கிறது. அடுத்தவர் சாதனைக்கு தங்கள் அட்ரசை ஓட்டுவதுதான் திராவிட மாடலா? - அண்ணாமலை

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India
    நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர் சமூகங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்தது பாஜக தான் எனவும் அதில் திமுக தன் பெயரை பதிக்க முயற்சி செய்கிறது எனவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 40 ஆண்டுகளுக்கு மேல் நரிக்குறவர்கள், குருவிக்காரர்கள் சமூகங்கள் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என போராடி வந்தனர். காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் அவர்கள் கொடுத்த மனுக்கள் எல்லாம் கிடப்பில் போடப்பட்டன. பின்னர் நரிக்குறவர்கள், குருவிக்காரர்கள் சமூகத்தினர், பல்வேறு அமைப்பினர் தமிழ்நாடு பாஜக அலுவலகத்திற்கு வந்து, தங்கள் குறைகளை கூறினர்.

    அந்த கோரிக்கையை பிரதமர் மோடியின் தனிப்பட்ட கவனத்திற்கும் மத்திய அரசின் எஸ்.டி பிரிவின் பதிவாளர் கவனத்திற்கும் கொண்டு சென்றோம்.

    இந்த நிலையில் மோடி தலைமையில் டெல்லியில் கூடிய மத்திய அமைச்சரவைக் கூட்டம், நரிக்குறவர்கள், குருவிக்காரர்கள் சமூகங்களை மாநில பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வகை செய்யும் அரசியலமைப்பு சட்டத் திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது. நரிக்குறவர் சமுதாய மக்கள் தங்களின் 40 கால கோரிக்கையை நிறைவேற்றி வைத்த பிரதமர் மோடிக்கும், மத்திய அரசுக்கும், வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்து வருகின்றனர்.



    இந்நிலையில் பிரதமர் மோடியின் நடவடிக்கையால், மத்திய அரசு செய்த இந்த சாதனைக்கு, வழக்கம்போல திமுக தனது திராவிட ஸ்டிக்கர் ஒட்டும், வேலையை செய்வது வேடிக்கையாக இருக்கிறது. அடுத்தவர் சாதனைக்கு தங்கள் அட்ரசை ஒட்டுவதுதான் திராவிட மாடலா? தங்களால் எதுவும் உருப்படியாக செய்ய முடியாது என்று நம்புவதால் அடுத்தவர் உழைப்பில் ஒட்டி பிழைக்க, ஸ்டிக்கர் ஒட்டுகிறதா திமுக?” என குறிப்பிட்டிருந்தார்.

    இதையும் வாசிக்க: ஆவின் இனிப்பு வகைகளின் விலை ரூ.80 வரை உயர்வு

    முதலமைச்சரின் ஒற்றைக் கடிதத்தில் மத்திய அரசு இப்படி வேலை செய்யும் என்றால் அவர்கள் ஆட்சிக் காலத்திலேயே இன்னும் எளிதாக குருவிக்காரர்கள் கோரிக்கையை தங்கள் அமைச்சர்களை வைத்தே நிறைவேற்றித் தந்திருக்கலாமே என கேள்வி அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

    திரவுபதி முர்மு நமது நாட்டின் ஜனாதிபதி ஆன பின்பு, பழங்குடியின மக்களும், நம் நாட்டின் உயர் பதவிகளில் அமர முடியும் என்பதை பிரதமர் மோடி தனது நடவடிக்கைகள் மூலம் நிரூபித்தாக தெரிவித்தார்.
    Published by:Siddharthan Ashokan
    First published:

    Tags: Annamalai, DMK, PM Modi

    அடுத்த செய்தி