• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பாஜகவில் எம்.எல்.ஏ. சீட் வாங்கி தருவதாக பாஜக, அதிமுக நிர்வாகிகள் ரூ.50 லட்சம் மோசடி - வழக்குப் பதிவு

பாஜகவில் எம்.எல்.ஏ. சீட் வாங்கி தருவதாக பாஜக, அதிமுக நிர்வாகிகள் ரூ.50 லட்சம் மோசடி - வழக்குப் பதிவு

பண மோசடி புகார்

பண மோசடி புகார்

இந்த புகாரில் முகாந்திரம் உள்ளதா என பாண்டிபஜார் போலீசார் விசாரணை நடத்திவந்தனர்.

  • Share this:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த ஜெயலட்சுமி நகரை சேர்ந்தவர் புவனேஷ் குமார் வயது 29. இவர் ஆரணியில் பாஜக நகர தலைவராக இருந்து வருகிறார். இவர் கடந்த 30ஆம் தேதி பாண்டி பஜார் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார்.

அந்த புகாரில், தனது  சித்தப்பா மகளான திருவண்ணாமலை பாஜக மகளிரணி மாவட்ட துணை தலைவராக இருக்கக்கூடிய வசந்திக்கு எம்.எல்.ஏ. சீட் கேட்டு அப்போதைய பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளராக இருந்தவரும், மத்திய இணை அமைச்சருமான கிஷன் ரெட்டியின் நெருங்கிய உதவியாளரான நரோத்தமன் மற்றும் அதிமுக வடசென்னை மாவட்ட துணைதுணை செயலாளர் விஜயராமன் ஆகியோர் எம்.எல்.ஏ. சீட்டு வாங்கி தருவதாக உறுதியளித்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதற்காக 1 கோடி ரூபாய் கேட்டதாகவும் இதனை நம்பி நரோத்தமன் மற்றும் விஜயராகவன் ஆகியோரிடம் முதல் தவணையாக 50 லட்சம் ரூபாயை சென்னை தி.நகரில் உள்ள தனியார் ஹோட்டலில் வைத்து கொடுத்ததாகவும், மேலும் பட்டியலில் பெயர் வந்தவுடன் மீதமுள்ள 50 லட்சம் ரூபாய் தருவதாக கூறியதாகவும் தெரிவித்திருந்தார்.

பின்னர், எம்.எல்.ஏ. பெயர் பட்டியலில் தனது உறவினரான வசந்தியின் பெயர் வராததால் இது குறித்து அவர்களிடம் கேட்ட போது, மழுப்பியதாகவும், மேலும் கொடுத்த ரூ. 50 லட்சம் பணத்தை திருப்பி கேட்டதற்கு பணத்தை தராமல், கொலை மிரட்டல் விடுத்து மோசடி செய்துவிட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

பின்னர் இது குறித்து பாஜக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோரிடம் முறையிட்டும் முறையான பதில் கிடைக்காததால், சென்னை வந்த மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியிடமும் முறையிட்டதாகவும், ஆனால் எந்தவித பயனும் இல்லததால் புகாரளிக்க முடிவெடுத்து, பாண்டிபஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்த புகாரில் முகாந்திரம் உள்ளதா என பாண்டிபஜார் போலீசார் விசாரணை நடத்திவந்தனர். புகாரில் முகாந்திரம் இருந்ததால் இந்த புகார் தொடர்பாக சட்ட ஆலோசனை பெற்று தற்போது பாண்டி பஜார் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். மோசடி, நம்பிக்கை மோசடி, ஆபாசமாக பேசுதல், மிரட்டல் விடுத்தல் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Must Read : தமிழகத்தில் மேலும் 4 நகரங்களில் ‘நீட்’ தேர்வு மையங்கள் - மத்திய அமைச்சர் தகவல்

குறிப்பாக மத்திய அமைச்சர் உதவியாளராக இருந்த நரோத்தமன் மற்றும் அவரது தந்தை சிட்டிபாபு, வடசென்னை மாவட்ட அதிமுக நிர்வாகி விஜயராமன் மற்றும் அவரது மகன் சிவபாலாஜி ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

எம்.எல்.ஏ. சீட் வாங்கி தருவதாக பாஜக, நிர்வாகியிடம் ரூ.50 லட்சம் பெற்று பாஜக, மத்திய இணை அமைச்சரின் முன்னாள் உதவியாளர் மற்றும் அதிமுக நிர்வாகி உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிப்பது அரசியல் வட்டாரத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Suresh V
First published: