• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பாஜக கூட்டணி இரண்டு கோல் அடிக்க உள்ளது - பொன் ராதாகிருஷ்ணன்

பாஜக கூட்டணி இரண்டு கோல் அடிக்க உள்ளது - பொன் ராதாகிருஷ்ணன்

பொன் ராதாகிருஷ்ணன்

பொன் ராதாகிருஷ்ணன்

சசிகலா அதிமுகவுடன் இணைவது குறித்து அந்த கட்சிதான் முடிவெடுக்க வேண்டும்.

  • Share this:
    பாஜக கூட்டணி இரண்டு கோல் அடிக்க இருக்கிறது என்றும், அது அடிக்கும் போது திமுக-காங்கிரஸின் அத்தியாயம் இருக்காது எனவும் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறினார்.

    இது குறித்து அவர் கூறுகையில், கன்னியாகுமரிக்கு வருகை தந்துள்ள கனிமொழியை நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையிலும், எனக்கு நெருக்கமான சகோதரி என்ற முறையிலும் வரவேற்கிறேன். அதே நேரத்தில் இவர் வருகை குமரிக்கு கேடு விளைவிக்கும் முயற்சியாகத் தான் இருக்கும், திமுகவினர் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களாக இல்லை.

    திமுகவினர் இரண்டு பேரையும் ஏமாற்றுகிறார்கள், கடவுள் நம்பிக்கை இல்லை என பக்தர்களையும், நார்த்திக வாதி என கூறி நார்த்திக வாதிகளை ஏமாற்றும் ஏமாற்று கட்சி அது. திமுகவில் இந்துக்கள் அதிகம் உள்ளனர், இன்னும் வேகமாக வளர்ந்து வந்தால் சிறுபான்மையினரை ஒழிக்க வேண்டும் என்ற முழக்கம் கூட திமுகவிடம் இருந்து வந்தால் ஆச்சிரியப்படுவதற்கு இல்லை.

    மேலும் படிக்க....அதுமட்டும் நடக்கவில்லை என்றால் தற்கொலை செய்துகொள்வேன் - ஜெகத்ரட்சகன் ஆவேசம்

    சசிகலா குறித்த பேச்சு குறித்து குரு மூர்த்தி விளக்கம் கொடுத்து விட்டார், விளக்கம் கொடுத்த பிறகு அது குறித்து பேசுவதில் அர்த்தம் இல்லை. சசிகலா விடுதலை ஆகி, வர இருக்கிறார். அவர், என்ன நிலைப்பாடு எடுக்கிறார் என தெரியவில்லை. சசிகலா அதிமுகவுடன் இணைவது குறித்து அதிமுகதான் முடிவெடுக்க வேண்டும். அது குறித்து, கருத்து கூற பாஜகவுக்கு தேவையும் எழ வில்லை. பாஜக, அதிமுகவுடன் தான் கூட்டணியில் இருந்து வருகிறது என்றார்.

    ஜல்லிக்கட்டை பார்க்க வந்தார் ராகுல்காந்தி, அவர் வந்த நாள் தமிழர்களின் இருண்ட நாளாக கருதுகிறேன், இது வரவேற்க பட வேண்டிய ஒன்று அல்ல என்று கூறிய பொன் ராதாகிருஷ்ணன், கூடா நட்பு கேடாய் முடியும் என்று கலைஞர் கூறியது உண்மையாகிறது. அது தமிழ் நாட்டிற்கு கேடு, இப்போ திமுகவிற்கு கேடு என்றார்.

    தொடர்ந்து பேசிய அவர், அதிமுக-பாஜக கூட்டணி இரண்டு கோல் அடிக்க உள்ளது அது அடிக்கும்போது திமுக காங்கிரஸின் அத்தியாயம் இருக்காது என்றும், அதிமுக பாஜக இடையே தொகுதி பங்கீட்டில் இழு பறி இல்லை, பறிக்க ஒண்ணும் இல்லை இழுக்கும் முயற்சி நடக்கும் எனவும் பொன் ராதாகிருஷ்ணன் கூறினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: