நாட்டைக் காக்க மக்கள் விரோத பாஜக - அதிமுக கூட்டணியை வீழ்த்த வேண்டும் - தமிழக ஆம் ஆத்மி

அமைதியான தமிழகத்தை குஜராத்தை போல் மதகலவரங்களை தூண்டி தேர்தலில் பலனடைய துடிக்கின்றனர் மோடியும் அமித்ஷாவும் என்று தமிழக ஆமாத்மி கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

news18
Updated: April 16, 2019, 11:10 AM IST
நாட்டைக் காக்க மக்கள் விரோத பாஜக - அதிமுக கூட்டணியை வீழ்த்த வேண்டும் - தமிழக ஆம் ஆத்மி
ஆம் ஆத்மி கட்சியின் சின்னம்
news18
Updated: April 16, 2019, 11:10 AM IST
நாட்டை காக்க மக்கள் விரோத பாஜக-அதிமுக கூட்டணியை வீழ்த்தியே தீர வேண்டும் என்று தமிழக ஆம் ஆத்மி கட்சியினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  “பிரதமர் மோடி, அமித்ஷாவிடமிருந்து நாட்டை காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக தான் காங்கிரஸ் கட்சியுடன் அரவிந்த கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி கூட்டணிக்கான பேச்சு வார்த்தை நடத்தியது.

அரவிந்த் கெஜ்ரிவால், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார், மேற்கு வங்காளத்தில் செல்வி மம்தா பானர்ஜி தலைமையில் நடைபெற்ற பல்வேறு கருத்துக்கள், கொள்கைகளை கொண்ட தலைவர்கள் (திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட) கலந்து கொண்ட பிரமாண்ட கூட்டத்தில் பங்கேற்று மோடி ஆட்சிக்கு எதிராக முழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

வருகிற ஏப்ரல் 18, 2019, இரண்டாம் கட்ட நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்திலும் நடைபெறவுள்ளது. மோடி அமித்ஷா தமிழகத்தில் எப்படியாவது வெற்றி பெற்றே தீர வேண்டும் என்கிற ரீதியில் வெறி கொண்டு காய்களை நகர்த்தி வருகின்றனர்.

அமைதியான தமிழகத்தை குஜராத்தை போல் மதகலவரங்களை தூண்டி தேர்தலில் பலனடைய துடிக்கின்றனர். தமிழ்நாட்டு மக்களை எப்படியாவது ஏமாற்றி வாக்குகளை பெற்றிட முயல்கின்றனர். பாஜகவின் இந்த சூழ்ச்சிகளை மக்கள் புரிந்து கொண்டு இவர்களுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும்.

இந்த தேர்தல் இந்திய வரலாற்றிலேயே மிக முக்கியம் வாய்ந்த தேர்தல் பாசிசத்திற்கும் ஜனநாயகத்திற்கும் எதிராக நடைபெறும் தேர்தல், பண மதிப்பிழப்பு, தவறான ஜிஎஸ்டி முறை, வேலைவாய்ப்பு இழப்பு, மற்றும் அம்பானி அதானிக்கான அரசாக செயல்படும் இந்த மக்கள் விரோத மோடி அரசை வீழ்த்தி ஜனநாயகத்தை மலர செய்ய வேண்டிய தேர்தல் தமிழக மக்கள் இதை மறந்து விட கூடாது.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்


தமிழகத்தில் புதிய சிறிய கட்சிகள் பல நல்ல தொலைநோக்கு சிந்தனைகளுடன் தேர்தலில் களமிறங்கி உள்ளனர் இது வரவேற்கத்தக்கது தான் இருப்பினும் இவர்களை ஆதரிக்க முடியாத சூழலில் தமிழகம் உள்ளது இவர்களை ஆதரித்தால் அது பாசிச பாஜக வெற்றி பெற வாய்பாக அமைந்து விடும் இதை கருத்தில் கொண்டே தமிழகத்தில் ஆம் ஆத்மி கட்சியும் போட்டியிடவில்லை.

ஆகவே இந்தியா மற்றும் தமிழகம் பாசிச பாஜக+அதிமுக கூட்டணி கட்சிகளிடமிருந்து மக்கள் காப்பாற்றப்பட வேண்டுமானால் பாஜக அணிக்கு எதிரான வாக்குகள் ஒருங்கிணைக்கப்பட்டு பாசிசத்திற்கு எதிரான வலுவான அணியான திமுக தலைமையிலான கூட்டணிக்கு வாக்களிப்பதை தவிர இப்பொழுது இதற்கு வேறு மாற்று இல்லை என்பதே உண்மை. இந்த ஏதார்தத்தை மோடியின் மோசமான ஆட்சியை எதிர்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

கட்சி பெரிதா நாடு பெரிதா என்றால் நாடு தான் முக்கியம் என்று கருதியே பாசிச மதவாத பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற ஒரே நோக்கில் அரவிந்த கெஜ்ரிவால் அவர்கள் ஆம்ஆத்மிகட்சியின் எதிர்கட்சியான காங்கிரஸ் கட்சியுடன் நாட்டு மக்களின் நலனுக்காக கூட்டணி வைக்கவும் தயாரானார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக ஆம் ஆத்மி கட்சி அரவிந்த கெஜ்ரிவால் வழியில்
தமிழகம் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் பாஜக+ அதிமுக பொய்க் கூட்டணி தோற்கடிக்க பட வேண்டும் பிரதமர் மோடி, அமித்ஷாவிடமிருந்து இந்தியாவை காப்பாற்றிட வேண்டும் என்று தமிழக மக்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம்” என்று அவர்களது அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

Also see....


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 16, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...