Home /News /tamil-nadu /

பாஜக ஏஜெண்ட் முகம் காட்டத்தான் சென்னார்... ஹிஜாப்பை அகற்ற சொல்லவில்லை: அண்ணாமலை

பாஜக ஏஜெண்ட் முகம் காட்டத்தான் சென்னார்... ஹிஜாப்பை அகற்ற சொல்லவில்லை: அண்ணாமலை

அண்ணாமலை

அண்ணாமலை

பாஜக வேட்பாளர்கள் அதிகமானோர் பல்வேறு மாவட்டங்களில் ஆளும் கட்சியினரால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர் என்று அண்ணாமலை தெரிவித்தார்.

    மதுரை மாவட்டம் மேலூரில் இஸ்லாமிய பெண்ணிடம் முகத்தை காட்டும்படி மட்டுமே பாஜக முகவர் கூறியுள்ளார், ஹிஜாப்பை அகற்ற கூறவில்லை என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

    தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கடந்த 19ம் தேதி நடைபெற்றது. அப்போது, மதுரை மாவட்டம் மேலூர் 8ஆவது வார்டுக்கு உட்பட்ட அல் அமீன் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் இருந்த பாஜக முகவர்  கிரி, ஹிஜாப் அணிந்து வந்த பெண்ணுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இதையடுத்து, உடனடியாக அவர் வாக்குச்சாவடியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில், சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, உள்ளாட்சித் தேர்தல் நியாயமாக நடைபெறவில்லை என்றும் திமுகவினர் வன்முறையில் ஈடுபட்டனர் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

    தேர்தல் நாளன்று குமரி முதல் சென்னை வரை அலங்கோலம் , அராஜகம் செய்தனர் திமுகவினர், வாக்குச் சாவடியின் உள்ளேயே பணப் பட்டுவாடா , கொரோனா வாக்காளர்களுக்கான நேரத்தில் வாக்குச்சாவடி யை பூட்டி வைத்து சிசிடிவியை அணைத்து கள்ள வாக்கு செலுத்தியுள்ளனர் என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.

    இசுலாமிய பெண்கள் புர்கா அணிவதை பாஜக வரவேற்பதாக தெரிவித்த அண்ணாமலை, மேலூரில் பாஜக ஏஜெண்ட் முகம் காட்டத்தான் சென்னார். ஹிஜாப்பை அகற்ற சொல்லவில்லை. வேண்டுமென்றால் சிசிடிவியை தேர்தல் ஆணையம் வெளியிடட்டும் என்று கூறினார்.



    மேலும், பாஜகவினர் பல இடத்தில் திமுகவினரால் தாக்கப்பட்டுள்ளனர். பாஜக வேட்பாளர்கள் அதிகமானோர் பல்வேறு மாவட்டங்களில் ஆளும் கட்சியினரால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர் என்று கூறிய அண்ணாமலை, கோவை, சென்னையில் அதிக வன்முறை நடைபெற்றுள்ளதாக குறிப்பிட்டார்.

    இதையும் படிங்க: திமுகவும், அதிமுகவும் தேர்தல் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கிவிட்டன - கமல் அட்டாக்


    பிகார் மாதிரியில் வாக்குச்சாவடிகள் கைப்பற்றப்பட்டுள்ளது. வேளச்சேரி டான்சி நகரில் திமுக குண்டர்களுக்கு பயந்து பொதுமக்கள் வாக்களிக்க வரவில்லை என்று தெரிவித்த அண்ணாமலை, திமுகவினர் முறைகேட்டில் ஈடுபட்டதாக பல்வேறு வார்டுகளின் பட்டியலை வாசித்தார்.

    மேலும் படிக்க: திருவான்மியூரில் வாக்குப்பதிவு இயந்திரத்தை உடைத்த திமுக பிரமுகர் உட்பட இருவர் கைது!

    சென்னையில் 40 வாக்குச்சாவடி வரை திமுகவினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக  குறிப்பிட்ட அவர், தேர்தல் ஆணையம் இதனை கண் மூடி வேடிக்கை பார்த்துள்ளதாகவும் இவற்றை திசைதிருப்ப மேலூரில் பாஜக பூத் ஏஜெண்ட் மீது ஹிஜாப் குற்றச்சாட்டு கூறியுள்ளனர். வாக்கு சதவீதம் குறைய காரணம் திமுகவினரின் அட்டூழியம்தான். டிஜிபி , தேர்தல் ஆணையம் தேர்தல் அமைதியாக நடந்ததாக கூறுவது நகைப்புக்குரியது என்றும் தெரிவித்தார்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Annamalai, BJP, Local Body Election 2022

    அடுத்த செய்தி