’ஸ்டாலின் சவாலை ஏற்க காவி தொண்டர்கள் தயாராக உள்ளோம்’- ஹெச்.ராஜா

’ஸ்டாலின் சவாலை ஏற்க காவி தொண்டர்கள் தயாராக உள்ளோம்’- ஹெச்.ராஜா
ஹெச். ராஜா, மு.க,ஸ்டாலின்.
  • News18
  • Last Updated: April 17, 2019, 3:06 PM IST
  • Share this:
திமுக தலைவராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின் விடுத்த சவாலை ஏற்க காவி தொண்டர்கள் தயாராக உள்ளதாக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.  

திமுக தலைவராக பொறுப்பேற்ற பின்னர் பொதுக்குழுவில் உரையாற்றிய மு.க.ஸ்டாலின், மத்திய, மாநில அரசுகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளையும், விமர்சனங்களையும் முன்வைத்தார். குறிப்பாக மதவாத சக்திகளுடன் அதிமுக கூட்டு வைத்திருப்பதாக குற்றம் சாட்டினார். மேலும், “ இந்தியா முழுவதும் காவி வண்ணம் அடிக்க நினைக்கும் மோடி அரசுக்கு பாடம் புகட்ட வா, முதுகெலும்பில்லாத இந்த மாநில அரசை தூக்கி எறிய வா... ” என தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

ஸ்டாலின் இந்த விமர்சனம் மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு அதிமுக மற்றும் பாஜக தரப்பிலிருந்து பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.  “ வாஜ்பாய் ஆட்சியில் பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்திருந்தது.  எந்த கட்சிக்கு முதுகெலும்பு இல்லை என்பதை தேர்தலில் சோதித்து பார்க்கட்டும்” என அதிமுகவை  மூத்த தலைவர் தம்பிதுரை கூறினார்.


திமுகவின் தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்றதால் எந்த அச்சமும் இல்லையெனக் குறிப்பிட்ட சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், திமுக தலைமை பொறுப்பில் ஸ்டாலின் இருந்த போதுதான் ஆர்.கே.நகரில் அக்கட்சி டெபாசிட் இழந்ததாகக் கூறினார்.

பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, திமுக தலைவராக பதவியேற்றுள்ள ஸ்டாலினுக்கு தமது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாகவும், அதேநேரம் ஸ்டாலினின் சவாலை ஏற்க மோடியின் காவி தொண்டர்கள் தயாராக உள்ளதாகவும் ட்விட்டர் பதிவிட்டுள்ளார்.
First published: August 29, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading