ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

பாஜக கேட்கும் தொகுதி கொடுத்தால் மட்டுமே அதிமுகவுடன் கூட்டணி - விபி துரைசாமி பிரத்யேக பேட்டி!

பாஜக கேட்கும் தொகுதி கொடுத்தால் மட்டுமே அதிமுகவுடன் கூட்டணி - விபி துரைசாமி பிரத்யேக பேட்டி!

வி.பி.துரைசாமி

வி.பி.துரைசாமி

வரும் காலங்களில் யாரையும் நம்பி தமிழக பாஜக இருக்காது எனவும் தனித்து தேர்தலில் சந்திக்க தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார். 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

பாஜக கேட்கும் தொகுதிகளை வழங்க அதிமுக இறங்கி வந்தால் மட்டுமே கூட்டணி என மாநில துணைத் தலைவர் வி பி துரைசாமி நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார்.

பாஜகவின் வளர்ச்சி அதிகரித்துள்ளதால் கூட்டணியில் குறைந்தபட்சம் 25 தொகுதிகளில் போட்டியியிடுவதே தனது விருப்பம் என அண்ணாமலை கூறியிருந்தார்.

அதிமுக கூட்டணியில் 25 தொகுதிகள் பாஜகவிற்கு கிடைக்க வாய்ப்பு குறைவு எனும்போது, இந்த கருத்து, பாஜக தனித்து போட்டியிட விரும்புவதை அண்ணாமலை மறைமுகமாக வெளிப்படுத்தியதாக அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.

இந்நிலையில், அதிமுக கூட்டணியில் இருப்பதுதான் பாஜகவிற்கு நல்லது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தனர். ஆனால், துணை கட்சியாக இருப்பதை தாங்கள் விரும்பவில்லை என்றும், ஆளுங்கட்சியாக இருக்கவே விரும்புகிறோம் என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பகிரங்கமாக கூறினார்.

இது குறித்து பாஜக துணை தலைவர் விபி துரைசாமியிடம் நியூஸ்18 சார்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், வரும் காலங்களில் யாரையும் நம்பி தமிழக பாஜக இருக்காது எனவும் தனித்து தேர்தலில் சந்திக்க தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் 2026 சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆளும்கட்சியாகும் வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “நாடாளுமன்றத்தில் கூட்டணி தேவைப்படுகிறது. ஆனால்  இத்தனை எம்.பிகள் வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக இருக்கிறது. அத்தனை தொகுதிகள் கொடுத்தால் மட்டுமே கூட்டணி வைக்க முடியும்” என கூறினார்.

First published:

Tags: ADMK, Annamalai, BJP