ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அதிமுக - பாஜக கூட்டணி தொடர்ந்து நீடிக்குமா? தடுமாறும் தலைவர்கள்.. குழப்பத்தில் தொண்டர்கள்!

அதிமுக - பாஜக கூட்டணி தொடர்ந்து நீடிக்குமா? தடுமாறும் தலைவர்கள்.. குழப்பத்தில் தொண்டர்கள்!

அண்ணாமலை -ஈபிஎஸ்

அண்ணாமலை -ஈபிஎஸ்

2024-ம் ஆண்டு வர உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக மற்றும் பாஜகவின் நிலைப்பாடுகள் குறித்த கருத்துகள் தொடர்ந்து விவாதப்பொருளாகியுள்ளன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நாட்டின் 18-வது மக்களவை தேர்தல் வரும் 2024-ம் ஆண்டு நடைபெறவுள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 இடங்களையும் கைப்பற்ற அனைத்து கட்சிகளும் பணிகளை துரிதப்படுத்தியுள்ளன. இந்த நிலையில்தான், 2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைப்போம் என கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.இதனைத்தொடர்ந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அதிமுகதான் தங்கள் கூட்டணியின் தலைமை என வெளிப்படையாக கூறினார்.

இதனிடையே, அதிமுக தனித்து போட்டியிடவும் தயாராக உள்ளதாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். இதற்கு பதிலளித்த பாஜக மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன், உள்ளாட்சி தேர்தலைப்போன்று நாடாளுமன்ற தேர்தலிலும் 39 வேட்பாளர்களை தனியாக நிறுத்த தங்களால் முடியும் என கூறினார்.

இதன் பின்னர் கூட்டணி விவகாரம் இரு கட்சிகளின் மத்தியில் பேசு பொருளாகியுள்ளது. பாஜகவின் வளர்ச்சி அதிகரித்துள்ளதால் கூட்டணியில் குறைந்தபட்சம் 25 தொகுதிகளில் போட்டியியிடுவதே தனது விருப்பம் என அண்ணாமலை கூறினார்.

அதிமுக கூட்டணியில் 25 தொகுதிகள் பாஜகவிற்கு கிடைக்க வாய்ப்பு குறைவு எனும்போது, இந்த கருத்து, பாஜக தனித்து போட்டியிட விரும்புவதை அண்ணாமலை மறைமுகமாக வெளிப்படுத்தியதாக அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.

இதையும் படிங்க: “எனக்கு எதுவும் தெரியாது..” ஆன்லைன் ரம்மி நிறுவன CEOக்கள் சந்திப்பு குறித்து அண்ணாமலை பதில்..!

 

இந்நிலையில், அதிமுக கூட்டணியில் இருப்பதுதான் பாஜகவிற்கு நல்லது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தனர்.

ஆனால், துணை கட்சியாக இருப்பதை தாங்கள் விரும்பவில்லை என்றும், ஆளுங்கட்சியாக இருக்கவே விரும்புகிறோம் என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பகிரங்கமாக கூறினார்.

இத்தகைக கருத்துகளுக்கு மத்தியில் அதிமுக - பாஜக கூட்டணி தொடர்ந்து நீடிக்குமா? அவ்வாறு நீடித்தால் அதற்கு யார் தலைமையாக இருப்பார்கள் என்ற குழப்பம் இரு கட்சி தொண்டர்களிடமும் ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 16 மாதங்கள் உள்ள நிலையில், இரு கட்சிகளும் எடுக்கப்போகும் முடிவு என்ன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

First published:

Tags: ADMK, BJP