முகப்பு /செய்தி /தமிழ்நாடு / 5 மாநில தேர்தல் முடிவுகளில் பாஜக பெற்றுள்ளது வரலாற்று சிறப்புமிக்க வெற்றி: அண்ணாமலை

5 மாநில தேர்தல் முடிவுகளில் பாஜக பெற்றுள்ளது வரலாற்று சிறப்புமிக்க வெற்றி: அண்ணாமலை

அண்ணாமலை

அண்ணாமலை

முப்பத்தி மூன்று ஆண்டுகளாக சாதி, மத அரசியலை வைத்து உத்தரப் பிரதேசத்தில் இருந்த ஆட்சியை கலைத்து பாஜக பெரிய வெற்றியை கண்டு உள்ளதாக அவர் கூறினார்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

5 மாநில தேர்தல் முடிவுகளில் பாஜக பெற்றுள்ளது வரலாற்று சிறப்புமிக்க வெற்றி என அக்கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில்  சென்னை மாநகராட்சியில் பாஜக சார்பில் போட்டியிட்ட 198 வேட்பாளர்கள் மற்றும் 134ஆவது வார்டில் வெற்றி பெற்ற உமா ஆனந்தன் உள்ளிட்டோருடன் பாஜக தலைவர் அண்ணாமலை தி.நகர் கமலாலயத்தில்  ஆலோசனை நடத்தினார்.

இதில் அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், துணை தலைவர்  வி.பி.துரைசாமி, கருப்பு முருகானந்தம், முன்னாள் எம்.பி.சசிகலா புஷ்பா, சென்னை தேர்தல் பணிக்குழு தலைவர் கராத்தே தியாகராஜன் மற்றும் மாவட்ட தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Also read... கோவையில் அரசு பேருந்தில் டீசல் திருடிய ஓட்டுநர் பணியிடை நீக்கம்!

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மாநிலத் தலைவர் அண்ணாமலை, சென்னை மாநகராட்சி தேர்தல் பணியில் சிறப்பாக செயல்பட்ட மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு பாராட்டுக்களை தெரிவித்தார்.

மேலும் நடைபெற்று முடிந்த ஐந்து மாநில தேர்தல்களில் பாஜக வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பெற்றுள்ளதாகவும், தொடர்ந்து முப்பத்தி மூன்று ஆண்டுகளாக சாதி, மத அரசியலை வைத்து உத்தரப் பிரதேசத்தில் இருந்த ஆட்சியை கலைத்து பாஜக பெரிய வெற்றியை கண்டு உள்ளதாகவும் கூறினார்.

சென்னை மாநகராட்சியில் தனித்து போட்டியிட்ட பாஜக 8.1 சதவீதம் வாக்குக்களை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Annamalai, BJP, Election 2022