ஆ.ராசா ஒரு ஊழல் பெருச்சாளி, தமிழகத்தில் முருகனின் புரட்சி ஆரம்பம்: ஹெச்.ராஜா பேட்டி

எச்.ராஜா

பக்தர்கள் தைப்பூசத்திற்குப் பழனிக்குச் சென்றால் மட்டும் போதாது. திருநீறு பூசினால் மட்டும் போதாது. முருகனை இழிவுபடுத்தும் கருப்பர் கூட்டத்திற்கு உதவி செய்யும் ஸ்டாலினையும், திமுகவையும் ஒரு சீட் கூட ஜெயிக்கவிடக் கூடாது.

  • Share this:
    ஆ.ராசாவுக்கு என்னைப் பேச எந்த ஒருதகுதியும் இல்லை, விரைவில் ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக திகார் சிறையில் தள்ளப்படுவார் என்று பாஜக-வின் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

    ஹெச் .ராஜா சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது, “ஊழல் செய்த ஆ.ராசாவுக்கு என்னைப் பற்றிப் பேச எந்தத் தகுதியும் இல்லை. 2ஜி ஊழலுக்காக விரைவில் திகார் சிறையில் இருப்பார்.

    தேசத்துரோகி, ஊழல் பெருச்சாளி ஆ.ராசாவுக்கு என்னைப் பற்றிப் பேசத் தகுதியில்லை. 2ஜி வழக்கில் விரைவில் திகார் சிறையில் இருப்பார்.

    ஸ்டாலினையே வேல் தூக்க வைத்த முருகப் பெருமானின் சக்தி அற்புதம். தமிழகத்தில் முருகனின் புரட்சி ஆரம்பம். பக்தர்கள் தைப்பூசத்திற்குப் பழனிக்குச் சென்றால் மட்டும் போதாது. திருநீறு பூசினால் மட்டும் போதாது.

    மேலும் படிக்க... என்னை வாளால் வெட்ட வந்தார்கள்; எங்களைத் தாக்கியது குண்டர்கள்தான், விவசாயிகள் அல்ல: டெல்லி போலீஸார்

    முருகனை இழிவுபடுத்தும் கருப்பர் கூட்டத்திற்கு உதவி செய்யும் ஸ்டாலினையும், திமுகவையும் ஒரு சீட் கூட ஜெயிக்கவிடக் கூடாது. இப்படிச் செய்யவில்லை என்றால் பழனிக்குப் போவதோ, திருநீறு பூசுவதோ போலித்தனம்” என்றார் ஹெச்.ராஜா.
    Published by:Muthukumar
    First published: