• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • வெங்காயம் விலை உயர்வால் நஷ்டத்தை சந்திக்கும் சிறு பிரியாணி கடைகள்....

வெங்காயம் விலை உயர்வால் நஷ்டத்தை சந்திக்கும் சிறு பிரியாணி கடைகள்....

Youtube Video

வெங்காய விலை உயர்விற்கு ஏற்றார் போல், பிரியாணியின் விலையை உயர்த்த முடியாமல் நஷ்டத்தை சந்திக்கும் உரிமையாளர்கள்..!

  • News18
  • Last Updated :
  • Share this:
வெங்காய விலை உயர்வால் பிரியாணி கடை உரிமையாளர்கள் கடும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனர். வாடிக்கையாளர்களை தக்கவைக்க கடையை நஷ்டத்திற்கு இயக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளனர். 

வெங்காயத்தின் விலை, கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. வடமாநிலங்களில் பெய்த கனமழையால் உற்பத்தி பாதிக்கப்பட்டு, சென்னையில் ஒரு கிலோ சின்ன வெங்காயத்தின் விலை 200 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.

இதேபோல, பெரிய வெங்காயம் 90 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு, சென்னையில் செயல்படக்கூடிய பிரியாணி கடைகளை ஆட்டம்காணச் செய்துள்ளது. சென்னையில் இயங்கக்கூடிய சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிரியாணி கடைகள், இழப்பை சந்தித்து வருகின்றன.

கடந்த மாதங்களில் 50 கிலோ வெங்காய மூட்டை, 1,500 ரூபாய்க்கு வாங்கிக்கொண்டிருந்த நிலையில், தற்போது 4,500 ரூபாய்க்கு வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால், வழக்கமாக தயார் செய்யப்படும் பிரியாணியில் பாதியளவுதான் தற்பொழுது தயார் செய்து விற்பனை செய்துவருவதாக வேதனையடைகிறார் கடை உரிமையாளர் இம்ரான்.

வெங்காய விலை உயர்வு சிறு பிரியாணி கடைகளை இழுத்து மூடும் நிலைக்கு தள்ளியுள்ளதாக கூறுகிறார் திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள பிரியாணி கடைகளுக்கு காய்கறி வழங்கும் வியாபாரி ஜஸ்தகீர்.

தங்களது கடைக்கு வரும் வாடிக்கையாளர்களை தக்கவைக்க வெங்காய விலை உயர்விற்கு ஏற்றார் போல், பிரியாணியின் விலையை உயர்த்த முடியாமல் லாபம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை என சில கடைகள் நஷ்டத்தில் இயங்கி வருவதாக கூறுகிறார் கடை உரிமையாளர் அப்துல் ரஹீம்.



 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: