வெங்காய விலை உயர்வால் பிரியாணி விலையும் உயர்கிறது..!

வெங்காய பச்சடிக்கு பதிலாக வெள்ளரிக்காய், கேரட் பச்சடி

வெங்காய பச்சடிக்கு பதிலாக வெள்ளரிக்காய், கேரட் பச்சடி

 • News18
 • Last Updated :
 • Share this:
  கோவையில் வெங்காய விலை கடுமையாக உயர்ந்து தற்போது சற்று குறைந்தாலும், தாக்குபிடிக்க முடியாத பிரியாணி கடைகள் வெங்காய பச்சடிக்கு பதிலாக வெள்ளரிக்காய் மற்றும் கேரட் பச்சடி வழங்க தொடங்கியுள்ளன.

  பிரியாணி தயாரிப்புக்கு வெங்காயம் பயன்படுத்துவதை தவிர்க்க முடியாததால் 10 ரூபாயிலிருந்து 50 ரூபாய் வரை விலையை கடைகள் உயர்த்தி உள்ளன. இப்படி உயர்த்தினாலும் வெங்காயத்தை முன்பு போல் அதிகமாக பயன்படுத்தாததால் பழைய சுவை கிடைக்கவில்லை என வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

  200 ரூபாய் வரை விற்ற வெங்காயம் தற்போது 120 ரூபாயை எட்டியுள்ள நிலையில் அது மேலும் குறைந்து 50 முதல் 60 ரூபாய்க்கு விற்கபடும் போதுதான் பிரியாணிக்கு பழைய சுவை கிடைக்கும் என வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர்.

   

   
  Published by:Sivaranjani E
  First published: