ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சென்னையில் பிரியாணி சாப்பிடும் போட்டி! 3 பிரியாணி சாப்பிட்டு ரூ.5 ஆயிரம் வென்ற ஊட்டி இளைஞர்

சென்னையில் பிரியாணி சாப்பிடும் போட்டி! 3 பிரியாணி சாப்பிட்டு ரூ.5 ஆயிரம் வென்ற ஊட்டி இளைஞர்

சிக்கன் பிரியாணி

சிக்கன் பிரியாணி

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  சென்னை அண்ணாநகரில் இரண்டு நிமிடங்களில் அதிக பிரியாணி சாப்பிட்ட இளைஞருக்கு 5 ஆயிரம் ரூபாய் பரிசு கிடைத்தது.

  சென்னை அண்ணாநகரில் உள்ள ஹோட்டலில் பிரியாணி உண்ணும் போட்டி நடத்தப்பட்டது. ஆவி பறக்கும் சிக்கன் பிரியாணியை போட்டி போட்டு வேகமாக சாப்பிட்டனர் போட்டியாளர்கள். ஆண்கள் மட்டுமல்லாது பெண்கள் சிலரும் இதில் பங்கேற்றனர். இரண்டு நிமிடங்களில் அதிகம் சாப்பிடுகிறார்களில் முதல் சுற்றில் 33 தேர்வு செய்யப்பட்டனர்.

  பின்னர் இரண்டாவது சுற்று தொடங்கியபோது வயிற்றில் இடமில்லை என்றாலும் 5 ஆயிரம் ரூபாய்க்காக பிரியாணியோடு மல்லுக்கட்டி சாப்பிட்டனர் போட்டியாளர்கள். சென்னை மட்டுமல்லாது வெளியூர்களில் இருந்தும் வந்திருந்த பிரியாணி பிரியர்களில் ஊட்டியைச் சேர்ந்த ராகேஷ் 3 பிரியாணி சாப்பிட்டு முதல் பரிசை தட்டிச்சென்றார். இரண்டாம் பரிசான 3 ஆயிரம் ரூபாயை சென்னை இளைஞர் தனுஷ் பெற்றார்.

  Also see:

  Published by:Karthick S
  First published:

  Tags: Biriyani