முகப்பு /செய்தி /தமிழ்நாடு / பறவைக்காய்ச்சல் அச்சம் எதிரொலி... கறிக்கோழி மற்றும் முட்டை விலை கடும் சரிவு

பறவைக்காய்ச்சல் அச்சம் எதிரொலி... கறிக்கோழி மற்றும் முட்டை விலை கடும் சரிவு

பறவைக்காய்ச்சல் அச்சம் எதிரொலி... கறிக்கோழி மற்றும் முட்டை விலை கடும் சரிவு

பறவைக்காய்ச்சல் எதிரொலியாக முட்டை விலை கடந்த 2 நாட்களில் 50 காசுகள் குறைந்து 4 ரூபாய் 60 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. கறிக் கோழி விலையும் கிடுகிடுவென சரிந்து வருகிறது.

  • Last Updated :

வடமாநிலங்கள் மற்றும் கேரளாவில் பரவி வரும் பறவைக்காய்ச்சல் எதிரொலியாக தமிழகத்தில் முட்டை மற்றும் கறிக்கோழி விலை கணிசமாக சரிந்துள்ளது. இதையடுத்து பறவைக் காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் கோழிப் பண்ணைகளில் கால்நடை துறையின் கண்காணிப்புக் குழுவினர் தொடர் ஆய்வை தொடங்கியுள்ளனர்.

கோழிப் பண்ணைகளை பாதுகாக்கும் பொருட்டு 45 அதிவிரைவு கண்காணிப்புக் குழுக்களை மாவட்ட ஆட்சியர் கா. மெகராஜ் அமைத்துள்ளார். ஒரு மருத்துவர், ஒரு உதவியாளர் கொண்ட இந்த குழுவினர் புதன் கிழமை முதல் நேரடியாக பண்ணைகளுக்கு சென்று நோய்த் தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நாமக்கல் மண்டலத்திலிருந்து கேரளத்திற்கு முட்டைகள் அனுப்பப்படுவது தடைபட்டுள்ளதால், கடந்த 5 நாட்களில் பண்ணைகளில் சுமார் 2 கோடி முட்டைகள் வரை தேங்கியிருப்பதாக பண்ணை உரிமையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். தேக்கமடைந்த முட்டைகளை குளிர்பதன கிடங்குகளில் பாதுகாப்பதாகவும், வரும் நாட்களில் முட்டைகள் தேக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

முட்டைகள் கணிசமாக தேக்கமடைந்ததால் முட்டை பண்ணைக் கொள்முதல் விலை கடந்த 2 தினங்களில் 50 காசுகள் வரை குறைக்கப்பட்டு, 4 ரூபாய் 60 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் பண்ணைகளில் முட்டைகள் சுத்தமாக இருப்பதாகவும் அவற்றை சாப்பிட வேண்டும் என்றும் பண்ணை உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்

இதனிடையே முட்டை விலை குறைவால் வாடிக்கையாளர்களை வருகை அதிகரித்திருப்பதாக கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். விற்பனையில் பாதிப்பில்லை என்றும், பொதுமக்கள் விரும்பி வாங்கிச் செல்வதாகவும் கூறுகின்றனர்.

மேலும் படிக்க...சேவல் சண்டை போட்டிக்கு அனுமதி கிடைக்குமா? உரிமையாளர்கள் எதிர்பார்ப்பு

கறிக்கோழி விலையும் 3வது நாளாக சரிந்துள்ளது. கறிக்கோழி தற்போது கிலோவிற்கு 6 ரூபாய் குறைந்து, 72 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 3 நட்களில் கிலோவிற்கு 26 ரூபாய் சரிந்துள்ளது.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Chicken, Egg