ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கேரளாவில் பறவைக் காய்ச்சல்: தமிழக - கேரளா எல்லையில் சோதனைகள் தீவிரம்

கேரளாவில் பறவைக் காய்ச்சல்: தமிழக - கேரளா எல்லையில் சோதனைகள் தீவிரம்

மாநில எல்லைகளில் வாகன சோதனை

மாநில எல்லைகளில் வாகன சோதனை

கோவை, நீலகிரி மாவட்டங்களிலும் கேரள எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  கேரளாவில் பறவைக் காய்ச்சல் பரவி வருவதை அடுத்து, தமிழக எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து வரும் வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளிக்கப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுகின்றன.

  கேரள மாநிலத்தில் ஆலப்புழா, கோட்டயம் மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. H5 N1 என்ற புதிய வகையிலான வைரஸ் கண்டறியப்பட்ட நிலையில், வாத்து மற்றும் கோழிகளை கொன்று அழிக்கும் பணியில் கேரள கால்நடை பராமரிப்புத் துறை ஈடுபட்டுள்ளது.

  தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு காய்கறி போன்றவை எடுத்துச் செல்லும் சரக்கு வாகனங்கள் இரு மாநிலங்களிடையே வந்து செல்வதால் தமிழகத்தில் பறவை காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தடுக்கும் விதமாக, இரு மாநில எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

  Also Read:  முன்னாள் அமைச்சர் தங்கமணி தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் சோதனை

  கன்னியாகுமரி மாவட்டம், படந்தாலுமூடு சோதனை சாவடியில் தமிழக கால்நடை பராமரிப்பு துறை சார்பில் சிறப்பு சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து வரும் அனைத்து சரக்கு வாகனங்களும் கிருமிநாசினி தெளித்தபிறகே கன்னியாகுமரிக்குள் அனுமதிக்கப்படுகின்றன.

  Must Read : குற்றால அருவியில் குளிக்க 9 மாதங்களுக்கு பிறகு அனுமதி

  இதேபோன்று, தேனி மாவட்டத்தில் குமுளி, கம்பம் மெட்டு, போடி மெட்டு ஆகிய 3 மலைச்சாலைகளில் சோதனைச் சாவடி அமைத்து கண்காணிக்கப்படுகிறது. அனைத்து வாகனங்களும் கிருமிநாசினி தெளிக்கப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுகின்றன.கோவை, நீலகிரி மாவட்டங்களிலும் கேரள எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

  Published by:Ramprasath H
  First published:

  Tags: Bird flu, Kerala, Tamil News, Tamilnadu