நவம்பர் 10-ஆம் தேதியில் இருந்து இயங்கவிருக்கும் உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியங்கள்.. வழிமுறைகள் என்ன?

வண்டலூர் பூங்கா

பூங்காக்களில், முதியவர்கள், 10 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு அனுமதி இல்லை. ஆன்லைன் முன்பதிவு வாயிலாக, பார்வையாளர்களை அனுமதிக்க, ஏற்பாடுகள் நடந்து வருகின்றன” என்று தெரிவித்துள்ளனர்.

 • Share this:
  பொழுதுபோக்கு பூங்காக்கள் , பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் இடங்கள் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி 10.11.2020 முதல் செயல்பட அனுமதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், உயிரியல் பூங்காக்கள் செயல்படுவதற்கான தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

  ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வு காரணமாக, உயிரியல் பூங்காக்களை திறக்கும் பணிகளை தமிழ்நாடு வனத்துறை முடுக்கிவிட்டுள்ளது.

  தமிழகத்தில், வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கிண்டி சிறுவர் பூங்கா, வண்டலுார் உயிரியல் பூங்கா, சேலம், வேலுார், திருச்சி விலங்கு காட்சி சாலைகள் உள்ளன. கொரோனா தடுப்பு ஊரடங்கால், உயிரியல் பூங்காக்களுக்கு, பொது மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு, அவற்றில் உட்புற பராமரிப்பு பணிகள் மட்டும் நடந்து வந்தன.  இந்நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வரும் நிலையில், உயிரியல் பூங்காக்களில் பார்வையாளர்களை, வரும்,10-ம் தேதி முதல் அனுமதிக்க, அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான நிலையான வழிகாட்டுதல்கள், இறுதி செய்யப்பட்டு வருகின்றன.

  இது குறித்து, வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கையில், அரசு உத்தரவுப்படி, ”கொரோனா தடுப்பு நிலையான விதிமுறைகளுக்கு உட்பட்டு, உயிரியல் பூங்காக்களில் பார்வையாளர்களை அனுமதிக்க, தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. முதியவர்கள், 10 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு அனுமதி இல்லை. ஆன்லைன் முன்பதிவு வாயிலாக, பார்வையாளர்களை அனுமதிக்க, ஏற்பாடுகள் நடந்து வருகின்றன” என்று தெரிவித்துள்ளனர்.
  Published by:Gunavathy
  First published: