• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பெரியாரின் முன்னோடியாக விளங்கிய அயோத்திதாசப் பண்டிதரின் வாழ்க்கைக் குறிப்பு..

பெரியாரின் முன்னோடியாக விளங்கிய அயோத்திதாசப் பண்டிதரின் வாழ்க்கைக் குறிப்பு..

பெரியாரின் முன்னோடியாக விளங்கிய அயோத்திதாசப் பண்டிதரின் வாழ்க்கைக் குறிப்பு..

பெரியாரின் முன்னோடியாக விளங்கிய அயோத்திதாசப் பண்டிதரின் வாழ்க்கைக் குறிப்பு..

சமூகநீதி கோட்பாட்டில் பெரியாரின் முன்னோடியாக விளங்கிய அயோத்திதாசப் பண்டிதரின் வாழ்க்கைக் குறிப்பை தற்போது பார்க்கலாம்.

  • Share this:
    1845-ம் ஆண்டு மே 20ம் நாள் அப்போதைய மெட்ராஸ் மாகாணத்தின் தேனாம்பேட்டை ஆயிரம் விளக்கு பகுதியில் பிறந்தார். காத்தவராயன் எனும் இயற்பெயர் கொண்ட இவர், தனக்கு தமிழ் கற்பித்த வல்லக்காளத்தி அயோத்திதாசர் எனும் ஆசிரியர் பெயரையே தன் பெயராக மாற்றிக்கொண்டார். சித்த மருத்துவர், பன்மொழிப் புலவர், பல்துறை வித்தகருமாக விளங்கிய அயோத்திதாசருக்கு "பண்டிதர்" பட்டம் தேடி வந்தது.

    ஏற்றத்தாழ்வுமிக்க சமூகத்தைக் கண்டு வெகுண்டெழுந்த அயோத்திதாசப் பண்டிதர், சாதி ஒழிப்பையும், சமூகநீதியையும் தனது லட்சியமாக கொண்டு 1907ம் ஆண்டு தமிழன் என்ற பத்திரிகையை நிறுவினார். தாழ்த்தப்பட்ட மக்களுக்காக தொடர்ந்து குரல் எழுப்பிவந்த அவர், 1892-ல் சென்னை மாகாண சங்கம் சார்பில் அரசுக்கு கல்வியுரிமை மற்றும் நில ஒதுக்கீடு ஆகிய இரண்டு கோரிக்கைகளை முன்வைத்தார். இதனால் 1893-ல் தாழ்த்தப்பட்டவர்களிடம் கல்வி பரவலாக்கப்பட வேண்டும் என்ற அரசாணை வெளியிடப்பட்டது.

    Also read: பாராளுமன்ற கமிட்டி ஒழித்துக்கட்ட நினைக்கும் விபிஎன் சேவை என்றால் என்ன? அதனால் என்ன ஆபத்து?

    நில ஒதுக்கீடு தொடர்பான அயோத்திதாசரின் 2வது கோரிக்கையே பிற்காலத்தில் பஞ்சமி நிலம் உருவாகவும் காரணமாக அமைந்தது. 1891ம் ஆண்டில் திராவிட மகாஜன சபை இவரால் தொடங்கப்பட்டது. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த தமிழர்கள், சாதியற்ற ஆதிதிராவிடர்கள் என்னும் கருத்தை முன்வைத்ததால், திராவிட கருத்தியலின் முன்னோடியாகவும் அயோத்திதாச பண்டிதர் அறியப்படுகிறார்.

    புத்த மத நெறியில் ஈடுபாடு கொண்டிருந்த அவர், 1900-ம் ஆண்டு பஞ்சசீலம் பெற்று புத்த மதத்தை தழுவினார். இந்திர தேச சரித்திரம், கபாலீஸ்வரர் சரித்திர ஆராய்ச்சி, அரிச்சந்திரனின் பொய்கள், திருவள்ளுவர் வரலாறு, திரிக்குறள் எனும் பெயரில் திருக்குறளுக்கு தெளிவுரை போன்ற படைப்புகளையும் உருவாக்கியுள்ளார்.

    ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலித்த அயோத்திதாச பண்டிதர், 1914-ம் ஆண்டு மே 5-ம் தேதி மறைந்தார். அயோத்திதாசரின் சித்த மருத்துவப் பங்களிப்பைக் கவுரவிக்கும் வகையில், தாம்பரம் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்திற்கு அவ‌ரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: