Home /News /tamil-nadu /

அனுமதியின்றி கட்டப்பட்ட 6 மாடிகள்: நீதிமன்றத்தை நாடிய பில்ரோத் மருத்துவமனை!

அனுமதியின்றி கட்டப்பட்ட 6 மாடிகள்: நீதிமன்றத்தை நாடிய பில்ரோத் மருத்துவமனை!

பில்ரோத் மருத்துவமனை

பில்ரோத் மருத்துவமனை

2006-ம் ஆண்டுக்கு முன்பே கட்டப்பட்ட 6 மாடிகளையும் வரைமுறைப்படுத்த அனுமதி கோரிய மனுவை பரிசீலிக்க சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திற்கு உத்தரவிட கோரி பில்ரோத் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் ராஜேஷ் ஜெகநாதன் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  • News18
  • 1 minute read
  • Last Updated :
    அனுமதியின்றி கட்டடங்கள் கட்டியதாக தங்கள் மீது நடவடிக்கை எடுக்க தடைவிதிக்கக் கோரி பில்ரோத் மருத்துவமனை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    சென்னை அமைந்தகரையில் உள்ள பில்ரோத் மருத்துவமையில், அனுமதியின்றி கட்டப்பட்ட 6 மாடிகளுக்கு சீல் வைக்க சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

    இந்நிலையில், 2006-ம் ஆண்டுக்கு முன்பே கட்டப்பட்ட 6 மாடிகளையும் வரைமுறைப்படுத்த அனுமதி கோரிய மனுவை பரிசீலிக்க சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திற்கு உத்தரவிடக் கோரி பில்ரோத் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் ராஜேஷ் ஜெகநாதன் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

    வரைமுறை செய்யக் கோரிய மனு குறித்து முடிவெடுக்கும் முன்பே, மருத்துவமனைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முயற்சிப்பதாக மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.

    பொதுமக்களுக்கு தேவையான மருத்துவ வசதிகளை வழங்கி வரும் தங்கள் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுப்பது, மருத்துவமனையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் என்றும், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் மருத்துவ உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ள தளங்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் சிகிச்சை பெறுவோர் பாதிக்கப்படுவார்கள் என்றும் மனுவில் தெரிவித்துள்ளார்.

    இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Also see...

    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Billroth hospital

    அடுத்த செய்தி