Home /News /tamil-nadu /

தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களில் பதவிகாலத்தை குறைக்க மசோதா

தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களில் பதவிகாலத்தை குறைக்க மசோதா

ஐ.பெரியசாமி

ஐ.பெரியசாமி

Tamil Nadu Assembly : தமிழ்நாடு கூட்டுறவு சங்க இயக்குனர்கள் குழுவின் பதவி காலத்தை 5 ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டுகளாக குறைக்க முடிவு.

    தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் விதிமுறைகளில் மாற்றங்கள் கொண்டு வரும் சட்ட முன்வடிவை கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தமிழ சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.

    தமிழ்நாடு தேர்தல் கூட்டுறவு சங்கத்தின் தேர்தல் ஆணையர் மற்றும் உறுப்பினர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் என்பதை 3 ஆண்டுகாளாக குறைத்து சட்டமுன்வடிவு கொண்டுவரப்பட்டுள்ளது.

    பொதுமக்களிடமிருந்தும் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களிடமிருந்தும் கூட்டுறவு சங்கங்களில் நிதி முறைகேடுகள் மற்றும் மோசடிகள் தொடர்பான பல புகார்கள் வரப்பெற்றன. இதன் அடிப்படையில் கூட்டுறவு சங்கங்களின் செயல்பாடுகள் ஆய்வு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் அதிக அளவில் நிதி முறைகேடுகளும் போலி நகைகள் மீதான கடன்கள் மற்றும் கோடிக்கணக்கில் போலி கடன்கள் வழங்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    கூட்டுறவு சங்கங்களின் பாதுகாப்பை கருதி நிறுவனங்களை நெறிப்படுத்தவும், கூட்டுறவு சங்கங்களின் செயல்பாட்டு திறனை அதிகரிக்கவும், சங்க இயக்குனர்களின் குழுவின் பதவி காலத்தை 5 ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டுகளாக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    Read More : '15 நிமிஷம் பிரதமர் காத்திருந்தது ஒரு பிரச்னையா, ஆனா விவசாயிகள்' - விளாசும் சித்து

    இதன் அடிப்படையில் தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களில் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன் சட்ட முன்வடிவை இன்று கூட்டுறவுதுறை அமைச்சர் ஐ.பெரியசாமி பேரவையில் அறிமுகம் செய்தார்.

    Must Read : மதுப்பிரியர்கள் கவனத்திற்கு.. தமிழகத்தில் 4 நாள்கள் டாஸ்மாக் கடை மூடல்

    இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழக சட்டப் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
    Published by:Suresh V
    First published:

    Tags: MK Stalin, TN Assembly

    அடுத்த செய்தி