ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஆன்லைன் ரம்மி தடை மசோதா கொண்டுவரப்படுமா?..சட்டபேரவை கூட்ட தொடர் எப்போது துவங்கும்?- இன்று சபாநாயகர் அப்பாவு அறிவிக்க வாய்ப்பு..!

ஆன்லைன் ரம்மி தடை மசோதா கொண்டுவரப்படுமா?..சட்டபேரவை கூட்ட தொடர் எப்போது துவங்கும்?- இன்று சபாநாயகர் அப்பாவு அறிவிக்க வாய்ப்பு..!

சபாநாயகர் அபாவு

சபாநாயகர் அபாவு

தமிழக சட்டப்பேரவை அக்டோபர் 17-ல் கூட வாய்ப்பு இருப்பதாகவும் அதுகுறித்த அறிவிப்பை சபாநாயகர் அப்பாவு இன்று அறிவிப்பு வெளியிடுவார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai, India

  எதிர்வரும் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில், ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்கும் சட்ட மசோதா கொண்டு வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன், ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையும் தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது.

  தமிழக சட்டப்பேரவையின் விதிகளின்படி, ஆறு மாதத்துக்கு ஒரு முறை பேரவையை கூட்ட வேண்டும். இந்த 6 மாத அவகாசம், அடுத்த மாதம் 10-ம் தேதி நிறைவடைய உள்ள நிலையில், முன்னதாக வரும் 17-ம் தேதி சட்டப்பேரவை கூட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

  பேரவைக் கூட்டத்தை தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக 4 நாட்களுக்கு நடத்த திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சபாநாயகர் அப்பாவு இன்று மாலை வெளியிடுவார் என தகவல் வெளியாகி உள்ளது.

  Also Read : காங்கிரஸ் தலைவர் தேர்தல்.. காந்தி குடும்பம் யாரையும் ஆதரிக்கவில்லை - சசி தரூர்

  இந்த கூட்டத் தொடரில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிக்கும் சட்ட மசோதா கொண்டுவர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

  அத்துடன், ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் மற்றும் ஸ்மார்ட் சிட்டி முறைகேடு தொடர்பான விசாரணை அறிக்கைகள் கூட்டத்தொடரின் இறுதி நாளில் தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

  Published by:Raj Kumar
  First published:

  Tags: Jayalalithaa Dead, Online rummy, Thoothukudi firing, TN Assembly