• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் மசோதா சட்டப்பேரவையில் தாக்கல்

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் மசோதா சட்டப்பேரவையில் தாக்கல்

சட்டமன்றம்

சட்டமன்றம்

தடையை மீறி விளையாடுபவர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம், 6 மாத சிறை தண்டனை வழங்கவும், ஆன்லைன் ரம்மி விளையாட்டு அரங்கம் வைத்திருப்போருக்கு ரூ.10 ஆயிரம் அபராதமும் 2 ஆண்டு சிறை தண்டனையும் வழங்கவும் வழி செய்யும்.

  • Share this:
    தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் சட்ட மசோதாவை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். தமிழகத்தில் கைபேசி மற்றும் கணிணி மூலம் ஆன்-லைனில் சூதாட்டம் விளையாடுவது அதிகரித்தது. இந்த விளையாட்டுகளில் ஈடுபட்ட பலர் கடனாளியாகி தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் அதிகரித்தன.

    இதன்காரணமாக ஆன்லைன் சூதாட்டத்தை ஒடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல தரப்பில் இருந்து அரசுக்கு கோரிக்கைகள் எழுந்தன. இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டன.

    இதையடுத்து பணம் வைத்து விளையாடக்கூடிய அனைத்து ஆன் லைன் சூதாட்ட விளையாட்டுகளையும் தடை செய்வதாகவும், ஆன் லைன் சூதாட்ட விளையாட்டுகளை நடத்துவோரை கைது செய்யும் வகையில் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என கடந்த நவம்பர் மாதம் முதலமைச்சர் அறிவித்தார்.

    இதை தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அவசர சட்டத்துக்கு ஆளுநரும் ஒப்புதல் அளித்தார். அன்று முதல் இந்த சட்டம் அமலுக்கு வந்தது.

    இந்நிலையில், ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் சட்டமசோதாவை துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.

    1930-ம் ஆண்டு தமிழ் நாடு சூதாட்டச் சட்டம்,1888 சென்னை நகர காவல் சட்டம் மற்றும் 1859 தமிழ்நாடு மாவட்ட காவல் சட்டம் ஆகியவற்றில் திருத்தம் செய்து 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு சூதாட்டம் மற்றும் காவல் சட்டங்கள் ( திருத்தச்) சட்டம் என தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த சட்டத்தின் மூலம், இவ்விளையாட்டில் பணம் வைத்து விளையாடுவோரையும் அதில் ஈடுபடுத்தப்படும் கணினிகள் மற்றும் அது தொடர்பான உபகரணங்களையும் தடை செய்ய முடியும்.

    தடையை மீறி விளையாடுபவர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம், 6 மாத சிறை தண்டனை வழங்கவும், ஆன்லைன் ரம்மி விளையாட்டு அரங்கம் வைத்திருப்போருக்கு ரூ.10 ஆயிரம் அபராதமும் 2 ஆண்டு சிறை தண்டனையும் வழங்கவும் வழி செய்யும்.

    மேலும் படிக்க.. அனைத்து மறைந்த முதல்வர்களின் வீடுகளையும் நினைவு இல்லமாக மாற்ற முடியாது - சென்னை உயர் நீதிமன்றம்

    இவ்விளையாட்டில் பணப்பரிமாற்றங்களை இணையவழி மூலம் மேற் கொள்வதை தடுக்கவும் இவ்விளையாட்டை நடத்தும் நிறுவனங்களின் பொறுப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் தண்டிக்கவும் அவசர சட்டம் வழிவகை செய்யும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: