ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

TN Assembly : உள்ளாட்சி அமைப்பு தனி அலுவலர்களின் பதவி காலத்தை நீட்டிப்பதற்கான மசோதா தாக்கல்

TN Assembly : உள்ளாட்சி அமைப்பு தனி அலுவலர்களின் பதவி காலத்தை நீட்டிப்பதற்கான மசோதா தாக்கல்

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

மறு சீரமைப்பு செய்யப்பட்ட 9 மாவட்டங்களின் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் தேர்தல் பணிகளை திட்டமிட்டப்படி நிறைவு செய்யமுடியவில்லை.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  ஊராட்சி, பேரூராட்சி நகராட்சி, மாநகராட்சிகளில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடத்த கூடுதல் அவகாசம் தேவைபடுவதால் தனி அலுவலர்களின் பதவி காலத்தை டிசம்பர் 31 ஆம் தேதி வரை நீட்டிப்பதற்கான சட்டமுன் வடிவை தமிழக சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

  மாநகராட்சி நகராட்சி திருத்த சட்டமுன் வடிவை நகர்புற வளர்ச்சிதுறை அமைச்சர் கே.என். நேரு தாக்கல் செய்தார். ஊராட்சிகள் திருத்த சட்டமுன்வடிவை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரிய கருப்பண் சட்டப் பேரவையில் அறிமுகப்படுத்தினார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தலை நடத்துவதற்கும் மாநில தேர்தல் ஆணையம் தயாரானது. கொரோனா திடீர் பரவல் காரணமாக மக்களுக்கு ஏற்பட்ட துன்பத்தை தணிப்பதற்கு தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது மறு சீரமைக்கப்பட்ட 9 மாவட்டங்களின் ஊராட்சி பேரூராட்சி நகராட்சி மாநகராட்சிகளில் தேர்தல் பணிகளை திட்டமிட்டப்படி நிறைவு செய்யமுடியவில்லை.

  Must Read : ‘தித்திப்பான உரை...’ மருத்துவ உலகமே முதலமைச்சருக்கு நன்றி கூறுகிறது - சதன் திருமலைக்குமார்

  தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆனையத்திற்கு கூடுதல் கால அவகாசம் தேவைப்படுவதால் தற்போது பணியில் உள்ள தனி அலுவலகர்களின் பதவி காலம் ஜுன் 30-ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில் தனி அலுவலர்களின் பதவி காலத்தை டிசம்பர் 31ஆம் தேதி வரை நீடித்து சட்டமுன்வடிவு அறிமுகப்படுத்தப்பட்டது. நாளை இந்த சட்டமுன்வடிவை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு மசோதா நிறைவேற்றப்பட உள்ளது.

  Published by:Suresh V
  First published:

  Tags: MK Stalin, TN Assembly