• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • அதிமுக ஆதரவு.. பாஜக வெளிநடப்பு: நிறைவேறியது நீட் விலக்கு சட்ட மசோதா!

அதிமுக ஆதரவு.. பாஜக வெளிநடப்பு: நிறைவேறியது நீட் விலக்கு சட்ட மசோதா!

நீட் விலக்கு சட்ட முன்வரைவு

நீட் விலக்கு சட்ட முன்வரைவு

பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரனுக்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர், எத்தனை பேர் தேர்ச்சி பெற்றுள்ளார்கள் என்பதை விட, 15 மாணவர்கள் உயிரிழந்துள்ளார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்.

  • Share this:
    தமிழக சட்டப்பேரவையில்  இன்று  தாக்கல் செய்யப்பட்ட  நீட் விலக்கு சட்ட முன்வடிவு  பாஜக நீங்கலாக பிற கட்சிகளின் ஆதரவோடு ஒருமனதாக நிறைவேறியது.

    மருத்துவ படிப்புகளுக்கான தேசிய நுழைவுத்தேர்வுக்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில், மருத்துவ படிப்புக்கான இடங்கள் ஏழை மாணவனுக்கு கிடைப்பதில் உள்ள சிரமங்களை கருத்தில் கொண்டு, 12 ஆம் வகுப்பு தேர்வு அடிப்படையில் மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்றும் கூறி,  நீட் தேர்விலிருந்து விலக்கு பெறும் நீட் விலக்கு சட்ட முன்வடிவு  சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

    இதனை தாக்கல் செய்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீட் தேர்வை ஆரம்பம் முதலே திமுக எதிர்த்து வருகிறது. அதை நிறைவேற்றும் வகையில் மருத்துவம், பல் மருத்துவம், ஹோமியோபதி ஆகிய மாணவர் சேர்க்கையில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை எனும் முழுமையான சட்ட முன்வடிவை முன்மொழிவதாக கூறினார்.

    பின்னர் பிற்பகலில் இந்த முன்வடிவு மீதான  விவாதம் நடைபெற்றது.  அப்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி,  சட்டப்போராட்டம் நடத்தி ஜெயலலிதா தமிழகத்தில் நீட் தேர்வு நடைபெற அனுமதிக்கவில்லை என்றும்  நீட் தேர்வுக்கு விலக்கு பெறுவது தொடர்பாக தொடந்து கடந்த ஆட்சியில் மத்திய அரசை வலியுறுத்தினோம்  என்று தெரிவித்தார்.

    மேலும்,   அரசு பள்ளியில் பயின்ற மாணவர்கள் பயன்பெறும் வகையில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்று குறிப்பிட்ட எடப்பாடி பழனிசாமி,  மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்தை எதிர்த்து மாநில் அரசு சட்டம் நிறைவேற்ற முடியுமா?என்பது குறித்து அமைச்சர் விளக்கமளிக்க வேண்டும்  என்று கேட்டுகொண்டார்.  தமிழக அரசு கொண்டுவந்துள்ள இந்த சட்ட முன்வடிவை அதிமுக வரவேற்பவதாகவும் அவர் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: நீட் தேர்வை ரத்து செய்வதற்கான சட்ட மசோதா சட்டப்பேரவையில் தாக்கல்


    நீட் விலக்கு சட்ட முன்வரைவை வரவேற்றதற்காக எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்தார். மேலும், “அரசியல் பாகுபாடு பார்க்காமல் சட்டப்பேரவையில் ஜல்லிக்கட்டுக்கு தீர்மானம் கொண்டு வந்த போது எதிர்கட்சியாக இருந்த போது நாங்கள் ஆதரித்தோம் . பல இடங்களில் மாணவர்கள் தற்கொலை சம்பவங்கள் நடைபெற்று வரும் இந்த நிலையில் அதை தடுக்க நீட் தேர்வுக்கு எதிரான இந்த சட்ட முன்வடிவை அனைத்து கட்சியினரும் ஒருமனதாக நிறைவேற்றி தரவேண்டும்” என்று அவர் கேட்டுகொண்டார்.

    அப்போது பேசிய பாஜக  சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், “ கூட்டணி கட்சியின் முடிவு வேறு, எங்கள் முடிவு வேறு.
    நீட் தேர்வை 99 ஆயிரம் பேர் 56 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது” என்று கூறினார்.

    மேலும் படிக்க: அரசு பணி நியமனங்களில் பெண்களுக்கு 40 சதவீத இட ஒதுக்கீடு - தமிழக அரசு திட்டம்


    அப்போது, ”எத்தனை பேர் தேர்ச்சி பெற்றுள்ளார்கள் என்பதை விட, 15 மாணவர்கள் உயிரிழந்துள்ளார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார். இதேபோல், நிதி அமைச்சர் பி.டி.ஆர், “எந்த தரவுகளை வைத்தாலும், ஆதாரவுடன் முன்வைக்க வேண்டும். எவ்வளவு பேர் பணம் செலுத்தி சேர்ந்துள்ளனர், எவ்வளவு பேர் பல முறை தேர்வு எழுதி உள்ளனர் என்பதை சொல்ல வேண்டும்” என்று பேசினார்.

    படிக்க: யாருக்கெல்லாம் நகைக்கடன் தள்ளுபடி... முழு விபரம்!


    இதையடுத்து, நீட் விலக்கு சட்ட முன்வடிவை எதிர்த்து பாஜக வெளிநடப்பு செய்வதாக நயினார் நாகேந்திரன் அறிவித்து வெளிநடப்பு செய்தார். தமிழக அரசு கொண்டு வந்துள்ள நீட் விலக்கு சட்ட  முன்வடிவை வரவேற்பதாக பாமக சார்பில் ஜி.கே.மணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக சித்திரை செல்வன் , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை ஆதரவு தெரிவித்தன.

    இதையடுத்து, முதலமைச்சர் கொண்டுவந்த நீட் விலக்கு சட்ட முன்வடிவு ஒருமனதாக நிறைவேறியதாக சபாநாயகர் அறிவித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: