ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சென்னையில் திருடப்பட்ட பைக் கடலூரில் வேறு ஒருவருக்கு பெயர் மாற்றம்... ஆர்.டி.ஓ அதிகாரிகள் மீது புகார்

சென்னையில் திருடப்பட்ட பைக் கடலூரில் வேறு ஒருவருக்கு பெயர் மாற்றம்... ஆர்.டி.ஓ அதிகாரிகள் மீது புகார்

பைக் திருட்டு

பைக் திருட்டு

அனைத்து ஆவணங்களையும் குமரன் நகர் காவல் நிலையத்தில் கொடுத்த பிறகும் தன்னை போலீசார் தினம்தோறும் காவல் நிலையம் வரச் சொல்லி அலைக்கழித்து மரியாதை குறைவாக நடத்தியதாக புகார் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

சென்னையில் திருடப்பட்ட இருசக்கர வாகனம் கடலூர் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் வேறொரு நபருக்கு பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக, ஆர்.டி.ஓ அலுவலக அதிகாரிகள், நடவடிக்கை எடுக்காத காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பட்டதாரி இளைஞர் காவல் ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளார்.

சென்னை சைதாப்பேட்டை சடையப்பன் தெருவை சேர்ந்தவர் அமுதராஜ்(23) பொறியியல் பட்டதாரியான இவர் தனது படிப்பை முடித்துவிட்டு சென்னையில் வேலை தேடி வருகிறார்.

இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 6-ம் தேதி  வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது இரு சக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.  இரு சக்கர வாகனத்தை கண்டுபிடித்து தருமாறு குமரன் நகர் காவல் நிலையத்தில் சிசிடிவி காட்சிகளோடு அமுத ராஜ் புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் குமரன் நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். இந்த நிலையில் தனது இருசக்கர வாகனத்தின் ஆவணங்களை எடுப்பதற்காக ஆன்லைனில் சோதனை செய்துள்ளார். அப்போது இவரது இரு சக்கர வாகனம் அமீர் அப்பாஸ் என்ற பெயருக்கு மாறி இருப்பது தெரியவந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த அமுதாராஜ் கே.கே நகர் ஆர்.டி.ஓ அலுவலகத்திற்கு சென்று அதிகாரியிடம் கேட்டுள்ளார். அப்பொழுது அமுததாஜின் இருசக்கர வாகனம் கடலூர் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் பெயர் மாற்றப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: வீட்டை காலி பண்ணுங்க... சசிகலா புஷ்பாவின் டெல்லி வீட்டுக்கு சீல் வைத்த அதிகாரிகள்.. காரணம் என்ன?

அதிர்ச்சடைந்த அமுதராஜ் மீண்டும் குமரன் நகர் காவல் நிலையத்திற்கு சென்று தனது இரு சக்கர வாகனத்தின் பெயர் பதிவானது தனது கையெழுத்து இல்லாமலே ஆர்.டி.ஓ அலுவலகத்தில் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது எனவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து தனது இரு சக்கர வாகனத்தை மீட்டு தருமாறும் மீண்டும் புகார் அளித்துள்ளார்.

ஆனால், குமரன் நகர் காவல் நிலையத்தில் இந்த புகார் குறித்து நடவடிக்கை எடுக்காமல் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக அமுதராஜை அலைக்கழித்து வந்ததாக கூறப்படுகிறது.

சி.சி.டி.வி காட்சிகள், இருசக்கர வாகனத்தின் ஆவணங்கள், பெயர் மாற்றம் செய்யப்பட்ட ஆவணங்கள் என அனைத்தையும் குமரன் நகர் காவல் நிலையத்தில் கொடுத்த பிறகும் நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் குமரன் நகர் போலீசார், கடலூர் ஆர்.டி.ஓ அலுவலக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கூறியும் தனது இரு சக்கர வாகனத்தை மீட்டு தரப்போறியும் அமுதராஜ் சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் அளித்தார்.

பின் செய்தியாளர்களை சந்தித்த அமுதராஜ், தனது இரு சக்கர வாகனத்தின் பதிவு தனது கையெழுத்து இல்லாமலே வேறொருவர் பெயருக்கு மாற்றப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். மேலும்,  வாகனத்தின் உரிமையாளர் இல்லாமல் வேறொரு நபருக்கு பைக்கை ஆர்.டி.ஓ அதிகாரிகள் எப்படி மாற்றம் செய்து கொடுத்தார்கள்? எனவும் இதுகுறித்து சம்பந்தப்பட்ட கடலூர் ஆர்.டி.ஓ அலுவலக அதிகாரிகளுக்கு கால் செய்து கேட்டபோது அலட்சியமாக, மிரட்டும் தொனியில் பதில் அளித்ததாகவும் அமுதா ராஜ் செ தெரிவித்தார்.

அனைத்து ஆவணங்களையும் குமரன் நகர் காவல் நிலையத்தில் கொடுத்த பிறகும் தன்னை போலீசார் தினம்தோறும் காவல் நிலையம் வரச் சொல்லி அலைக்கழித்து மரியாதை குறைவாக நடத்தியதாகவும் குமரன் நகர் போலீசார் மீது குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த 40 நாட்களுக்கு மேலாக தன்னால் இன்டர்வியூக்கு செல்ல முடியவில்லை எனவும் தனது குடும்பத்தினர் மிகவும் கஷ்டப்பட்டு வருவதாகவும் தெரிவித்த அவர், குமரன் நகர் போலீசார் மற்றும் கடலூர் ஆர்.டி.ஓ அலுவலக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் தனது இருசக்கர வாகனத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும் எனவும் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருப்பதாக  தெரிவித்துள்ளார்.

Published by:Murugesh M
First published:

Tags: Bike Theft, Crime News