ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

பேரிகார்ட் கெத்து இளைஞர்... மனம்திருந்தி சமூக வலைதளத்தில் புதிய பயணம்

பேரிகார்ட் கெத்து இளைஞர்... மனம்திருந்தி சமூக வலைதளத்தில் புதிய பயணம்

பீட்டர்

பீட்டர்

இன்ஸ்டாகிராம், டப்ஸ்மாஷ், மியூசிக்கலி என பல்வேறு வலைதளங்களில் நகைச்சுவை, சமூக சிந்தனை சார்ந்த கருத்துக்கள் அடங்கிய வீடியோக்களை பீட்டர் பதிவேற்ற தொடங்கினார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  சென்னையில் கடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மெரினா கடற்கரையில் பைக்கில் வந்து பாரி கார்டுகளை தரதரவென இழுத்துச் சென்று போலீசாரால் கைது செய்யப்பட்ட இளைஞர் தற்போது சமூக வலைத்தளங்கள் மூலம் அதிகளவு பணம் சம்பாதித்து வருகிறார். இவர் மனம் மாறியது எப்படி? நம்மோடு அவர் பகிர்ந்துக்கொண்ட அனுபவங்கள்...

  2019 புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது சென்னை மெரினா கடற்கரை களைகட்டியிருந்தது. வழக்கமாக ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மெரினாவில் கூடி புத்தாண்டு கொண்டாடுவது வழக்கம். அப்போது நள்ளிரவில் 3 பைக்குகளில் வந்த இளைஞர்கள் சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த பேரிகார்டு இழுத்துக்கொண்டு பைக்கில் வலம் வந்து அந்த காட்சிகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு கொண்டாடினர்.

  இதையடுத்து அவர்கள் அனைவரும் அடுத்தநாள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இந்த செய்தி தொலைக்காட்சிகளிலும் சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவியது. இதில் சம்பந்தப்பட்ட முக்கியமான நபர் சென்னை பெரம்பூரைச் சேர்ந்த பீட்டர். அவர் வெளியே எங்கே சென்றாலும் பொதுமக்கள் அவரை அடையாளம் கண்டுபிடித்து விட்டனர். வேலை தேடி பல இடங்களுக்கு சென்றும் அவருக்கு வேலை தர யாரும் முன்வரவில்லை. இதனால் தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு வந்ததாக கூறுகிறார் பீட்டர்.

  காலப்போக்கில் எந்த சமூக வலைத்தளத்தில் தான் அசிங்கப்படுத்த பட்டேனோ அதே சமூக வலைத்தளத்தையே தனது மூலதனமாக மாற்றவேண்டும் என்று நினைத்துள்ளார் அவர். இதையடுத்து பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டப்ஸ்மாஷ், மியூசிக்கலி, டிக் டாக் போன்ற பல்வேறு வலைத்தளங்களில் வீடியோ பதிவிடுவது, காமெடியாக நடிப்பது,பாடுவது, சமூக சிந்தனை சார்ந்த கருத்துக்களை பரப்புவது, பல நிறுவனங்களுக்கு டிஜிட்டல் மார்க்கெட்டிங் செய்வது போன்றவற்றில் ஈடுபட தொடங்கினார். இதையடுத்து தற்போது வருமானம் அதிகரித்திருப்பதாக கூறுகிறார் பீட்டர். சாப்ட்வேர் என்ஜினீயரை காட்டிலும் அதிக அளவு பணம் இதில் கிடைப்பதால் மனநிறைவாக இருப்பதாக கூறுகிறார்.

  ஒருவேளை அன்று போலீசாரிடம் சிக்காமல் இருந்திருந்தால் இன்னமும் அப்படித்தான் வாழ்ந்து இருப்பேனோ என்று எண்ணுவதாகவும் அவர் சொல்கிறார். அன்று நடைபெற்ற சம்பவம் தனது வாழ்வில் ஏற்பட்ட மிகப்பெரிய திருப்புமுனை என்பதும் பீட்டரின் கருத்தாக உள்ளது. அதிர்ஷ்ட காற்று யாருக்கு எப்போது எந்தப்பக்கம் வீசும் என்பதை யாராலும் கணிக்க முடியாது என்பதை பிரதிபலிக்கிறது பீட்டரின் பேரிகார்டு சம்பவம்.

  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Vijay R
  First published:

  Tags: Chennai