முகப்பு /செய்தி /தமிழ்நாடு / “வீடியோ உண்மையில்லை.. தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பிரச்னை இல்லை” பீகார் குழு

“வீடியோ உண்மையில்லை.. தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பிரச்னை இல்லை” பீகார் குழு

செய்தியாளர்களிடம் பேசிய பீகார் அரசு குழுவினர்

செய்தியாளர்களிடம் பேசிய பீகார் அரசு குழுவினர்

தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என்று பிகார் அரசு நியமித்த குழு தெரிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாகப் போலியான செய்திகள் பரவின. இது குறித்து உண்மை நிலையை கண்டறியவும், அது தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளவும் 4 பேர் கொண்ட உயர்மட்ட குழுவை பிகார் மாநில அரசு அமைத்தது. பிகார் மாநில கிராம வளர்ச்சித்துறை செயலாளர் பாலமுருகன் ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் அமைக்கப்பட்ட அந்த குழு, சனிக்கிழமை தமிழகம் வந்தடைந்தது.

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுத்துறை செயலாளர் ஜெகநாதன், தொழிலாளர் நலத்துறை ஆணையர் அதுல் ஆனந்த் உள்ளிட்டோருடன் இந்த குழுவினர் ஆலோசனை மேற்கொண்டனர். அப்போது, உணவகம், கட்டுமானம் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டுள்ள புலம்பெயர் தொழிலாளர்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை எடுத்துரைத்தனர்.

இதனைதொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பாலமுருகன், தாக்குதல் தொடர்பான வீடியோ உண்மையில்லை என்பதை புலம்பெயர் தொழிலாளர்கள் உணர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

First published:

Tags: Bihar, Migrant Workers