• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • நிரந்தரமாய் கையைக் கழுவுங்கள் இதுதான் மோடியின் பாடம் - தேர்தல் முடிவுகள் குறித்து குஷ்பு ட்விட்

நிரந்தரமாய் கையைக் கழுவுங்கள் இதுதான் மோடியின் பாடம் - தேர்தல் முடிவுகள் குறித்து குஷ்பு ட்விட்

குஷ்பு

குஷ்பு

நிரந்தரமாய் கையைக் கழுவுங்கள். இது மோடி பீகாரில் உணர்த்திய பாடம் என்று பா.ஜ.கவில் இணைந்துள்ள குஷ்பு தெரிவித்துள்ளார்.

  • Share this:
    பீகார் சட்டமன்றத் தேர்தல், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், தெலங்கானா, கர்நாடகா, மணிப்பூர், ஹரியானா ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகள் இன்று வெளிவந்துகொண்டிருக்கின்றன. பீகாரைப் பொறுத்தவரை வாக்கு எண்ணிக்கை மெதுவாக நடைபெற்றுவருகிறது. தற்போது, பா.ஜ.க, ஜனதா தளம் மற்றும் ஆர்.ஜே.டி, காங்கிரஸ் ஆகிய இரு பெரும் கூட்டணி கட்சிகளும் அறுதிப் பெரும்பான்மை என்ற நிலையை நோக்கிச் செல்லவில்லை. தற்போது வரை 123 தொகுதிகளில் பா.ஜ.க கூட்டணி முன்னிலையில் இருந்துவருகிறது. ஆர்.ஜே.டி கூட்டணியும் 112 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது.

    ஆனால், பீகாரைக் கடந்த பிற மாநிலங்களில் நடைபெற்ற இடைத் தேர்தல்களில் பா.ஜ.க மிகப் பெரும் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. குறிப்பாக மத்திய பிரதேசத்தில் 28 தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் 22 தொகுதிகளில் பா.ஜ.க வெற்றி பெற்றுள்ளது.


    இந்தநிலையில், தேர்தல் வெற்றி தொடர்பாக குஷ்புவின் ட்விட்டர் பதிவில், ‘அடிக்கடி கை கழுவுங்கள் இது corona சொல்லிய பாடம்
    நிரந்தரமாய் கையை கழுவுங்கள் இது மோடி ஜி பீகாரில் உணர்த்திய பாடம் வரும் தேர்தலில் தமிழகம் இதை எதிரொலிக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.




    Bihar Election Results Live: Click Here To Read in English:



    பீகார் தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் நியூஸ்18-ல் அறியுங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: