பீகாரில் கார் - டிராக்டர் மோதி விபத்து - 11 பேர் உயிரிழப்பு

பீகாரில் கார் - டிராக்டர் மோதி விபத்து - 11 பேர் உயிரிழப்பு
பீகாரில் கார் - டிராக்டர் மோதி விபத்து
  • Share this:
பீகார் மாநிலத்தில் அதிவேகமாகச் சென்ற ஸ்கார்பியோ காரும் டிராக்டரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், 2 குழந்தைகள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர்.

முஷாபர்பூர் அருகே நிகழ்ந்த இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் இருப்பதால், உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே, விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என முஷாபூர்பூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.


First published: March 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading