விஜய்யை விசாரிக்க திட்டமா...? அர்ச்சனா கல்பாத்தியின் பதிலுக்கு காத்திருக்கும் வருமான வரித்துறை...!

விஜய்யை விசாரிக்க திட்டமா...? அர்ச்சனா கல்பாத்தியின் பதிலுக்கு காத்திருக்கும் வருமான வரித்துறை...!
பிகில் பட போஸ்டர் | அர்ச்சனா கல்பாத்தி
  • News18
  • Last Updated: February 13, 2020, 3:19 PM IST
  • Share this:
பிகில் பட வசூல் தொடர்பாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் கிடுக்கிப்பிடி கேள்விகளை எழுப்பியுள்ளனர். 

தமிழக திரையுலகில் வசூலை வாரிக்குவித்த பிகில் திரைப்படத்தினை தயாரித்த ஏஜிஎஸ் சினிமாஸ் நிறுவனம், அதற்கு பைனான்ஸ் செய்த அன்புச்செழியன், நாயகன் விஜய் ஆகியோருக்கு தொடர்புடைய 38 இடங்களில் வருமானவரித்துறை அண்மையில் சோதனையிட்டனர்.

3 நாட்கள் நடந்த சோதனை முடிவில், விஜய் வீட்டிலிருந்து ஆவணமோ, ரொக்கமோ கைப்பற்றவில்லை என்று அறிவித்தனர். ஆனால், அன்புச்செழியன் வீட்டிலிருந்து கணக்கில் வராத ரொக்கம் 77 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதோடு, அவர் 300 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.


பிகில் திரைப்படத்தின் வசூல் 300 கோடி என்று சொல்லப்பட்ட கணக்கைவிட அதிகளவு வசூல் இருப்பதும், அதேபோல், நடிகர்-நடிகைகளுக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் குறித்தும் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன.

இதையடுத்து, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித்துறை புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு, அன்புச்செழியனும் மற்றும் ஏ.ஜி.எஸ் சினிமாஸ் முதன்மை செயல் அதிகாரி அர்ச்சனாவுக்கும் சம்மன் அளிக்கப்பட்டது.

சம்மனை ஏற்றுக்கொண்ட ஏஜிஎஸ் சினிமாஸ் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியும், கல்பாத்தி அகோரத்தின் மகளுமான அர்ச்சனா கல்பாத்தி அகோரம் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.புதன்கிழமை காலை 11.40 மணியளவில் வருமானவரித்துறை அதிகாரிகள் முன்பு ஆஜரான அர்ச்சனாவிடம் 500 கேள்விகள் கொண்ட ஆவணங்களை அதிகாரிகள் கொடுத்துள்ளனர்.

அதிகாரிகளின் கேள்விகளுக்கு பதில் அளிக்க கால அவகாசம் கேட்டதால், மீண்டும் அடுத்த வாரம் ஆஜராகி விளக்கம் அளிக்க அர்ச்சனாவுக்கு ஐடி அதிகாரிகள் அனுமதியளித்தனர்.

ஏஜிஎஸ் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியாக, அர்ச்சனா கல்பாத்தி, பதவியேற்ற பின்பு அவர் தயரித்த முதல் படம் "பிகில்". பிகில் திரைப்படத்தின் வருவாய், செலவுகள் குறித்து வருமானவரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்த ஆவணங்களின் அடிப்படையில் அவரிடம் விசாரணை நடத்த வருமானவரித்துறை முடிவு செய்துள்ளனர்.

நடிகர் விஜயின் சம்பளம் எவ்வளவு, என்ன வகையில் சம்பளம் கொடுக்கப்பட்டது என்பதற்கு அர்ச்சனா சொல்லப்போகும் பதிலை வைத்தே, நடிகர் விஜய் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்படுவாரா என்பது தெரியவரும்.

நடிகர் விஜய் எங்களின் டார்கெட் அல்ல என்று வெளிப்படையாகவே வருமானவரித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஆனால், அன்புச்செழியனை அதிகாரிகள் விடுவதாக இல்லை, கடந்த 5 ஆண்டுகளின் வரவு செலவு ஆவணங்களை கைப்பற்றி, தொடர் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
First published: February 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்