டிக்கெட்டுகளை கிழித்து விஜய் ரசிகர்கள் வேதனை!

news18
Updated: September 20, 2019, 9:57 AM IST
டிக்கெட்டுகளை கிழித்து விஜய் ரசிகர்கள் வேதனை!
டிக்கெட்டுகளை கிழித்த ரசிகர்கள்
news18
Updated: September 20, 2019, 9:57 AM IST
தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், உரிய டிக்கெட் வைத்திருந்தும் ரசிகர்கள் அனுமதிக்கப்படாததால் அரங்கத்திற்குள் செல்ல முயன்ற ரசிகர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.

சென்னை தாம்பரத்தை அடுத்த சோமங்கலம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. நடிகர் விஜய், நயன்தாரா, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியை காண சென்னை மட்டுமின்றி வெளிமாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள், வாகனங்களில் குவிந்தனர்.

விழா மேடையில் விஜய்இதன் காரணமாக தாம்பரம் முதல் சோமங்கலம் வரை சுமார் 7 கி.மீ தூரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸ் வாகனமும் சிக்கியது.

இது ஒருபுறம் இருக்க, விஜயை காண ஆவலோடு வந்திருந்த ரசிகர்கள், உரிய டிக்கெட்டுகளை வைத்திருந்தும் அரங்கத்திற்கு செல்ல அனுமதிக்கவில்லை என குற்றம்சாட்டினர். அரங்கத்திற்குள் மல்லுக்கட்டி செல்ல முயன்ற ரசிகர்களை போலீசார் தடியடி நடத்தி கலைக்க முயன்றனர். அதில் சிலருக்கு காயம் ஏற்பட்டது.Loading...

மேலும், பத்தாயிரம் இருக்கைகளை கொண்ட அரங்கத்தில், இருபதாயிரம் டிக்கெட்டுகளை அச்சிட்டு தங்களுக்கு விநியோகித்துள்ளதாக குற்றம்சாட்டிய ரசிகர்கள், டிக்கெட்டுகளை கிழித்தெறிந்தனர்.

விஜயை ஒருமுறை பார்த்தாலே போதும் என ஆவலோடு பல கி.மீ. தூரம் கடந்து வந்திருப்பதாகவும், பலமணி நேரம் காத்திருந்து போலீசிடம் அடிவாங்கி தற்போது ஏமாற்றத்துடன் திரும்பி செல்வதாகவும் ரசிகர்கள் வேதனையோடு கூறினர்.

மேலும் விஜய்யின் கவனத்திற்கு இச்சம்பவம் செல்லவேண்டும் எனவும், அந்த பட விழாவை மாநாடு போல் நடத்த வேண்டும் என்றும் ரசிகர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Also See...

அரசை விமர்சித்த விஜய்

ஆங்கிலமும் இந்தியும் மொழிகள் மட்டுமே அறிவு அல்ல -அட்லி

 

First published: September 20, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...