ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தாமரையின் நிஜ முகத்தை பார்த்து ஷாக்.. உடைந்து அழும் பிரியங்கா!

தாமரையின் நிஜ முகத்தை பார்த்து ஷாக்.. உடைந்து அழும் பிரியங்கா!

பிரியங்காவுக்கும் தாமரைக்கும் இடையே மோதல் வலுக்கிறது. இருவரும் குழாயடி சண்டை போட்டுக்கொள்வது போல தெரிகிறது.

பிரியங்காவுக்கும் தாமரைக்கும் இடையே மோதல் வலுக்கிறது. இருவரும் குழாயடி சண்டை போட்டுக்கொள்வது போல தெரிகிறது.

பிரியங்காவுக்கும் தாமரைக்கும் இடையே மோதல் வலுக்கிறது. இருவரும் குழாயடி சண்டை போட்டுக்கொள்வது போல தெரிகிறது.

 • 2 minute read
 • Last Updated :

  பிக்பாஸ் சீசன்-5 நிகழ்ச்சி தற்போது 8 போட்டியாளர்களுடன் 85 நாட்களை நிறைவு செய்துள்ளது. கடந்த வாரம் யாரும் எதிர்பார்க்காத வகையில் அக்ஷரா மற்றும் வருண் இருவரும் வெளியேறிய நிலையில், இந்த வாரம் மீதமுள்ள போட்டியாளர்களுக்கு டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் கொடுக்கப்பட்டு வருகிறது. நேற்றைய தினம் ஹவுஸ்ட்மேட்ஸ் அனைவரையும் ஓபன் நாமினேஷன் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்ட நிலையில், போட்டியாளர்கள் தாங்கள் நாமினேட் செய்ய விரும்பிய நபர்களை பற்றி சொன்னார்கள். இறுதியில் போட்டியாளர்கள் அனைவரும் நாமினேஷன் ப்ராசசில் இருப்பதாக கூறி பிக்பாஸ் பல்பு கொடுத்துவிட்டார்.

  இதையும் படிங்க.. விக்கியை பார்த்து ரொமாண்டிக் லுக் விடும் நயன்தாரா

  பின்னர், போட்டியாளர்கள் அனைவருக்கும் இரவு விருந்து கொடுக்கப்பட உள்ளது என்றும் அனைவரும் அதற்கேற்றாற் போல ரெடி ஆக வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. இதனால் சந்தோஷமடைந்த போட்டியாளர்கள் மிக அழகாக ரெடியாகியிருந்தனர். ஆனால் அதுதான் அவர்களின் டிக்கெட் டு ஃபினாலேவின் முதல் டாஸ்க் என்பது பின்னர் தான் தெரியவந்துள்ளது. அதில் யார் இந்த டிக்கெட்டை பெற தகுதியானவர்கள் இல்லை என்பதை முடிவு செய்ய வேண்டும் என போட்டியாளர்களிடம் கேட்கப்பட்டது. அதில் பிரியங்காவும், நிரூப்பும் மாறி மாறி சண்டை போட்டுக்கொண்டனர். இறுதியில் தாமரை மற்றும் நிரூப் இருவரில் ஒருவரை வெளியேற்ற முடிவு செய்தனர். அப்போது தாமரை நிரூப்பிற்காக விட்டுக்கொடுக்க முடிவு செய்திருந்தார். பிறகு, அனைவரும் கலந்து பேசி இறுதியில் நிரூபை வெளியேற்றினர்.

  இதையும் படிங்க.. ஆணுறை விளம்பரம் முதல் கபில் சர்மா ஷோவில் மறுக்கப்பட்டது வரை - சன்னி லியோனின் சர்ச்சைக்குரிய சம்பவங்கள்!

  இந்த நிலையில் 86ம் நாளான இன்று டிக்கெட் டு ஃபினாலே-வுக்கான அடுத்தகட்ட டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் போட்டியாளர்களுக்கு கூடையில் முட்டைகள் வைக்கப்பட்டுள்ளது. யார் முட்டை உடைக்கிறதோ அவர்கள் போட்டியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று கூறப்பட்டது. போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் மற்றவரின் முட்டையை உடைக்க செல்கின்றனர். அதில், பிரியங்காவுக்கும் தாமரைக்கும் இடையே மோதல் வலுக்கிறது. இருவரும் குழாயடி சண்டை போட்டுக்கொள்வது போல தெரிகிறது. மேலும்,பாவனி முட்டைகளை பிறரிடம் கொடுத்துவிட்டு டாஸ்கில் இருந்து வெளியேறியதோடு, தேம்பி தேம்பி அழுகிறார். அதோடு புரமோ முடிக்கப்பட்டது.

  ' isDesktop="true" id="650749" youtubeid="1OFo2KA6zHE" category="tamil-nadu">

  இந்நிலையில், தற்போது 86ம் நாளிற்கான 2வது புரமோ வெளியாகியுள்ளது. அதில், தாமரைக்கும் பிரியங்காவிற்கும் இடையே டாஸ்கில் நடந்த மோதல் குறித்து பிரியங்கா, பாவனியிடம் மிகக்கடுப்பாக பேசுகிறார். அப்போது பிரியங்கா கூறியதாவது, " நான் ஏதும் பண்ணல. என்ன யாரு அட்டாக் பண்றங்களோ, அவங்கள நான் அட்டாக் பண்ணுவேன். நா என்ன அவளோட இதுவா? இளிச்சவாயின்னு என் மண்டையில எழுதி ஒட்டிருக்கா என்ன? தாமரைக்காக நான் பலமுறை நின்றுருக்கிறேன். ஆனால் எவ்வளவு தைரியம் என்னை டாஸ்கில் அப்படி தாக்கியிருக்கிறாள். நான் காட்டாயம் தாமரையிடம் இனி பேசப்போவதில்லை. இந்த ஷோ முடியும் வரை எனக்கு தாமரையிடம் பேச வேண்டும் என்ற எண்ணம் இல்லை." என்று பாவனியிடம் பிரியங்கா தெரிவிக்கிறார். தாமரையோ மிக சோகமாக படுத்திருக்கிறார்.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  First published: