ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

Bigg Boss Tamil 5: முடிவுக்கு வந்த பிரியங்கா - நிரூப் சண்டை!

Bigg Boss Tamil 5: முடிவுக்கு வந்த பிரியங்கா - நிரூப் சண்டை!

 இந்த வாரம் நடைபெற்ற தலைவர் டாஸ்கில் இருவருக்கும் சண்டை நடந்த நிலையில், நிரூப் கடுமையான வார்த்தைகளால் திட்டியதால் பிரியங்கா அழுதது குறிப்பிடத்தக்கது.

இந்த வாரம் நடைபெற்ற தலைவர் டாஸ்கில் இருவருக்கும் சண்டை நடந்த நிலையில், நிரூப் கடுமையான வார்த்தைகளால் திட்டியதால் பிரியங்கா அழுதது குறிப்பிடத்தக்கது.

இந்த வாரம் நடைபெற்ற தலைவர் டாஸ்கில் இருவருக்கும் சண்டை நடந்த நிலையில், நிரூப் கடுமையான வார்த்தைகளால் திட்டியதால் பிரியங்கா அழுதது குறிப்பிடத்தக்கது.

  • 2 minute read
  • Last Updated :

விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் 5-வது சீசன் நிகழ்ச்சி வெற்றிகரமாக 80 நாட்களை கடந்துள்ளது. 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் அமீர், சஞ்சீவ் வைல்டு கார்டு எண்ட்ரியாக வருகை தந்தனர். இந்த நிகழ்ச்சியில் இருந்து இதுவரை 10 பேர் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில் தற்போது பிரியங்கா, ராஜு, பாவ்னி, வருண், அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி, நிரூப், சஞ்சீவ் மற்றும் அமீர் ஆகிய 10 போட்டியாளர்கள் உள்ளனர்.

இவர்களில் இந்த வாரம் பிரியங்கா, வருண், நிரூப், அக்ஷரா, பாவ்னி ஆகியோர் நாமினேஷன் லிஸ்டில் உள்ளனர். இவர்களில் குறைந்த வாக்குகள் பெரும் நபர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவார் என்பதால் இந்தவாரம் எலிமினேட் ஆகப்போவது யார்? என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. இதில் நிரூப், வருண் இருவரில் ஒருவர் வெளியே செல்ல அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் இந்த வாரம் ஃப்ரீஸ் டாஸ்க் தொடங்கியுள்ளது. இதில் ஃப்ரீஸ், ரிலீஸ், லூப், ரீ வைண்ட் போன்ற வார்த்தைகளை பிக் பாஸ் அறிவிப்பார். இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சி இந்த வாரம் கலகலப்பாக சென்று கொண்டிருக்கிறது. மேலும் இந்த டாஸ்கில் போட்டியாளர்களின் குடும்பத்தினர் ஒவ்வொருவராக வருகை தருகின்றனர்.

இதுவரை அக்ஷ்ரா, சிபி, நிரூப், ராஜுவின் குடும்பத்தினர் வருகை தந்துள்ளனர். இந்தநிலையில் இன்றைய இரண்டாவது ப்ரோமோவில் பிரியங்காவின் அம்மா மற்றும் சகோதரர் வருகை தரும் காட்சிகள் உள்ளது. அதில் அனைவரும் பிரீஸில் இருக்க, பிரியங்காவின் குடும்பத்தினர் வருகை தருகின்றனர். இதனை பார்த்த பிரியங்கா அம்மா என அழைத்தவாறு ஓடுகிறார். அவரை பார்த்ததும் அவரது அம்மாவும் உணர்ச்சிவசப்பட்டு கட்டியணைக்கும் காட்சிகள் உள்ளது. இதனை பார்த்து அக்ஷ்ரா, தாமரை அழும் காட்சிகள் இருந்தது.

இதன் தொடர்ச்சியாக தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவில் பிரியங்கா அவரது குடும்பத்தினருடன் தனியாக பேசி கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வரும் நிரூப்பை பார்த்து ப்ரியங்காவின் தம்பி, உங்களுக்குள் சண்டை முடிந்துவிட்டதா? என கேட்கிறார்.

மேலும் படிக்க - அண்ணாத்த 50-வது நாளில் பாட்ஷா டயலாக் பேசிய ரஜினிகாந்த்!

அதற்கு நிரூப், நட்பு என வந்துவிட்டால் சரியாக கேம் விளையாட முடியாது, இவளுக்கு ஆதரவு கொடுப்பது போல இருக்கும் என்கிறார். நீங்கள் இருவரும் கேம் என வந்துவிட்டால் தனியாக விளையாடுகிறீர்கள், உங்களை யாரும் இப்படி கூறியதில்லை என்கிறார். பின்னர் நிரூப், பிரியங்காவிற்கு கைகொடுத்து பிரண்ட்ஸ் என சமாதானம் ஆகும் காட்சிகள் உள்ளது. இந்த வாரம் நடைபெற்ற தலைவர் டாஸ்கில் இருவருக்கும் சண்டை நடந்த நிலையில், நிரூப் கடுமையான வார்த்தைகளால் திட்டியதால் பிரியங்கா அழுதது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து கமல் இந்தவாரம் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published: