ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

பிக் பாஸில் பிரியங்கா குடும்பத்தினர்... எமோஷனலில் போட்டியாளர்கள்!

பிக் பாஸில் பிரியங்கா குடும்பத்தினர்... எமோஷனலில் போட்டியாளர்கள்!

இரண்டாவது ப்ரோமோவில், பிரியங்காவின் அம்மா மற்றும் சகோதரர் வருகை தரும் காட்சிகள் உள்ளன.

இரண்டாவது ப்ரோமோவில், பிரியங்காவின் அம்மா மற்றும் சகோதரர் வருகை தரும் காட்சிகள் உள்ளன.

இரண்டாவது ப்ரோமோவில், பிரியங்காவின் அம்மா மற்றும் சகோதரர் வருகை தரும் காட்சிகள் உள்ளன.

 • 3 minute read
 • Last Updated :

  விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சி யின் 5வது சீசன் தொடங்கி வெற்றிகரமாக 11 வாரங்களை நிறைவு செய்துள்ளது. இறுதிக்கட்டத்தை நோக்கி செல்லும் இந்த நிகழ்ச்சியில் தற்போது பிரியங்கா, ராஜு, பாவ்னி, வருண், அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி, நிரூப், சஞ்சீவ் மற்றும் அமீர் ஆகிய 10 போட்டியாளர்கள் உள்ளனர்.

  இந்தநிலையில் இந்த வாரம் ஃப்ரீஸ் டாஸ்க் தொடங்கியுள்ளது. இதில் ஃப்ரீஸ், ரிலீஸ், லூப், ரீ வைண்ட் போன்ற வார்த்தைகளை பிக் பாஸ் அறிவிப்பார். இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சி இந்த வாரம் கலகலப்பாக சென்று கொண்டிருக்கிறது. மேலும் இந்த டாஸ்கில் போட்டியாளர்களின் குடும்பத்தினர் ஒவ்வொருவராக வருகை தருகின்றனர்.

  முதல் நாள் அக்ஷ்ரா, சிபியின் குடும்பத்தினர் வந்திருந்தனர். நேற்றைய நிகழ்ச்சியில் நிரூப் அப்பா வந்திருந்தார். மிகவும் ஜாலியாக பேசிய அவர், அனைவரும் சிறப்பாக விளையாடுவதாக கூறினார். மேலும் நிரூப் அவரது அப்பாவிடம் யாஷிகா எப்படி இருக்கிறாள் என விசாரித்தார். ஆனால் அதுகுறித்து தனக்கு தெரியவில்லை என அவர் கூறிவிட்டார். நேற்றைய ப்ரோமோவில், யாஷிகா, நிரூப்பை பார்க்க வரும் காட்சிகள் இருந்த நிலையில், இந்த காட்சிகள் நேற்றைய நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகவில்லை.

  இதனை தொடர்ந்து ராஜுவின் மனைவி வந்தார். அவரை பார்த்தவுடன் உணர்ச்சிவசப்பட்ட ராஜு, முத்தமிட்டு வரவேற்றார். ராஜு சிறப்பாக விளையாடி வருவதாகவும், இந்த வீட்டில் உள்ள அனைவரும் சக போட்டியாளர்கள் எனவே அண்ணா, தங்கை என உறவில் இணையாமல் டாஸ்குகளில் எளிதாக விட்டுக்கொடுக்காமல் விளையாடுமாறு அட்வைஸ் செய்தார். இதனை கேட்ட ராஜு, வெளியில் எல்லாம் ஓகே தானே, இதற்கு பின்னர் வாய்ப்பு தேடி அலையும் நிலை ஏற்படாது தானே? என உறுதி செய்து கொண்டார்.

  இதனை தொடந்து ராஜுவின் அம்மாவை வந்த நிலையில், கண்ணீருடன் ராஜு அவரை வரவேற்றார். பின்னர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேசி கொண்டிருக்கும் போது, ராஜு 106 நாட்கள் இருந்து வெற்றி பெற்று வருவது தான் எனக்கு பெருமை என அவரது அம்மா கூறினார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது ராஜுவிற்கு தான் ரசிகர்கள் பட்டாளம் அதிகம் உள்ளது. ஒவ்வொரு முறை ராஜு நாமினேட் ஆகும் போதும் அவர் முதல் நபராக காப்பாற்றப்பட்டு வருவதால் ராஜு வெற்றி பெற வாய்ப்புகள் அதிகம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

  மேலும் நேற்றைய நிகழ்ச்சியில் அமீர் தனது கடந்து வந்த பாதை குறித்து பேசினார். அப்பா இல்லாமல் அண்ணன் மற்றும் அம்மாவுடன் மிகவும் கஷ்டப்பட்டு வளர்ந்தது குறித்து பேசினார். தனது பள்ளி படிப்பின் போது அம்மா கொலை செய்யப்பட்டு விட்டதாகவும் அவரை தகனம் செய்ய கூட வீட்டில் இருந்த சில பொருட்களை விற்றதாக அமீர் பேசியதை கேட்டு சக ஹவுஸ் மேட்ஸ் மட்டுமின்றி ரசிகர்களும் கண்ணீர் விட்டனர். பின்னர் அமீரை ஒரு முஸ்லீம் குடும்பத்தினர் தங்கள் வீட்டில் இருக்குமாறு கூறியதாகவும், தற்போது அவர்கள் தான் எனக்கு எல்லாம் என்றார். மேலும் தனது அம்மாவின் ஆசைப்படி நடன மாஸ்டர் ஆனதாகவும் ஆனால் அதனை பார்க்க அம்மா இல்லை என்றும் அழுதவாறு கூறினார். இதனை கேட்ட ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் அவரை கட்டியணைத்து சமாதானப்படுத்தினர்.

  இந்தநிலையில் இன்று பாவ்னியின் குடும்பத்தினர் வருவது இன்றைய முதல் ப்ரோமோவில் இருந்தது. தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில், பிரியங்காவின் அம்மா மற்றும் சகோதரர் வருகை தரும் காட்சிகள் உள்ளது. அதில் அனைவரும் பிரீஸில் இருக்க, பிரியங்காவின் குடும்பத்தினர் வருகை தருகின்றனர். இதனை பார்த்த பிரியங்கா அம்மா என அழைத்தவாறு ஓடுகிறார். அவரை பார்த்ததும் அவரது அம்மாவும் உணர்ச்சிவசப்பட்டு கட்டியணைக்கும் காட்சிகள் உள்ளது. இதனை பார்த்து அக்ஷ்ரா, தாமரை அழும் காட்சிகள் உள்ளது. பின்னர் அனைவரும் வந்து அவர்களின் பேசும் காட்சிகள் உள்ளது.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  First published: