முகப்பு /செய்தி /தமிழ்நாடு / கடந்து வந்த பாதை... அமீரின் கதையை கேட்டு கண்கலங்கிய ஹவுஸ் மேட்ஸ்!

கடந்து வந்த பாதை... அமீரின் கதையை கேட்டு கண்கலங்கிய ஹவுஸ் மேட்ஸ்!

இன்று வெளியான முதல் இரண்டு ப்ரோமோக்களில் ப்ரீஸ் டாஸ்க்  தொடங்குவது உறுதியாகியுள்ளது.

இன்று வெளியான முதல் இரண்டு ப்ரோமோக்களில் ப்ரீஸ் டாஸ்க்  தொடங்குவது உறுதியாகியுள்ளது.

இன்று வெளியான முதல் இரண்டு ப்ரோமோக்களில் ப்ரீஸ் டாஸ்க்  தொடங்குவது உறுதியாகியுள்ளது.

 • Last Updated :

  விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் தொடங்கி 77 நாட்களை கடந்து சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் சென்று கொண்டிருக்கிறது.

  இந்த சீசனில் இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபிநய் வாடி, சின்ன பொண்ணு, பாவ்னி, நாடியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர். மேலும் வைல்டு கார்டு எண்ட்ரியாக சஞ்சீவ் மற்றும் அமீர் வந்துள்ளனர்.

  இந்தநிகழ்ச்சியில் இதுவரை 11 பேர் வெளியேறியுள்ள நிலையில் தற்போது 10 போட்டியாளர்கள் உள்ளனர். இதில் வைல்டு கார்டு எண்ட்ரியாக வந்த அமீர், டாஸ்க் என்று வந்துவிட்டால் சிறப்பாக விளையாடி வருகிறார்.

  டான்ஸ் மாஸ்டரான அமீர் பிரபுதேவாவின் தீவிர ரசிகர் ஆவார். இவர் ஆர்மி ட்ரைனிங் முடித்திருப்பதாகவும், இவரது சிறுவயதிலே இவரின் அம்மா கொலை செய்யப்பட்டுவிட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானது.

  இந்தநிலையில் இன்று வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவில், கடந்த வந்த பாதை டாஸ்கில் போட்டியாளர்கள் தங்கள் வாழ்க்கை குறித்து பேசியது போல இன்று அமீர் பேசுகிறார். அதில், என் குடும்பத்தில் நான், எனது அம்மா மற்றும் அண்ணா என மூன்று பேர் இருந்தோம். நான் என் அப்பாவை பார்த்ததேயில்லை. எனது அம்மாவிற்கு நான் பெரிய டான்சர் ஆக வேண்டும் என ஆசை, சிறு வயதில் பிரபுதேவா மாஸ்டர் டான்ஸ் ஆடுவதை பார்த்து ஆடுமாறு என்னை கூறுவார்.

  பின்னர் நான் ஒரு லோக்கல் சேனலில் டான்ஸ் ஆடும்போது ஊர் முழுவதும் சென்று என் மகன் டான்ஸ் ஆடுகிறான் என கூறினார். இன்று நான் தமிழ்நாட்டிலேயே முன்னனி சேனல் நடந்தும் போட்டியில் நிற்கிறேன், ஆனால் தற்போது என் அம்மா உயிருடன் இல்லை என அழுதவாறு கூறுகிறார். இதனை பார்த்து அழுதுகொண்டிருக்கும் சக ஹவுஸ் மேட்ஸ் அவரை கட்டியணைத்து சமாதானம் செய்யும் காட்சிகள் உள்ளது.

  இன்று வெளியான முதல் இரண்டு ப்ரோமோக்களில் ப்ரீஸ் டாஸ்க்  தொடங்குவது உறுதியாகியுள்ளது. இதில் இன்று அக்ஷ்ராவின் அண்ணன், அம்மா மற்றும் சிபியின் மனைவி இன்று வருவது உறுதியாகியுள்ளது. இதுபோல ப்ரீஸ், ரிலீஸ் என இந்த வாரம் முழுவதும் கலகலப்பாக இருக்கும். மேலும் தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவை பார்க்கையில் இன்று வைல்டு கார்டு எண்ட்ரியாக வந்துள்ள இருவர் இன்று கடந்து வந்த பாதை குறித்து பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  First published: