பிக் பாஸ் தமிழ் சீசன் 5ல் சனிக்கிழமையான இன்று கமல்ஹாசன் வரும் எபிசோடுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது இன்றைய நிகழ்ச்சியின் முதல் புரமோ வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் வீட்டில் 10வது வாரம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வார இறுதியில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுகிழமையில் கமல்ஹாசன் எபிசோடு ஒளிப்பரப்பாகும். வாரம் முழுக்க நடந்த நிகழ்வுகளை பற்றி ஹவுஸ்மேட்ஸ் உடன் கலந்துரையாடுவார் கமல். பஞ்சாயத்தும் செய்வார், தப்பை சுட்டிக்காட்டி வசைப்பாடுவார். கமல் எபிசோடை மட்டுமே பார்க்க தனியாக ஒரு கூட்டமே இருக்கிறது. இந்நிலையில் இந்த பிக் பாஸ் 5 சீசனில் இதுவரை எந்த கமல்ஹாசன் எபிசோடுக்கும் அதிகரிக்காத எதிர்ப்பார்ப்பு இந்த வாரம் வீக் எண்டு எபிசோடுக்கு பல மடங்கு அதிகரித்துள்ளது. அதற்கு காரணம், பாவனி விவகாரம் தான்.
பாவனிக்கும் அபினய்-க்கும் இடையேயான நட்பை, உறவை அல்லது அதையும் தாண்டி புனிதமான ஏதோ ஒன்றை ஹவுஸ்மேட்ஸ் ராஜூ, சிபி ஆகியோர் தவறான கண்ணோட்டத்தில் அதை பெரிதாக்கியது ரசிகர்கள் பலருக்கும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ட்விட்டர் போன்ற வலைத்தளங்களில் பாவனிக்கு ஆதரவாக சில ஹாஷ்டேக்குகளும் ட்ரெண்டாகின. இந்நிலையில், கமல்ஹாசன் இதை பற்றி கண்டிப்பாக பேச வேண்டும் என பலரும் விருப்பம் தெரிவித்து இருந்தனர். மொத்த ஆண்களும் சேர்ந்து ஒரு பெண்ணை பொதுவெளியில் ஒழுக்க முறையில் அசிங்கப்படுத்துவது பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமாக இருந்து விட கூடாது என பலரும் தெரிவித்து இருந்தனர்.
#BiggBossTamil இல் இன்று.. #Day69 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் - திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/uHHDiPvHe6
— Vijay Television (@vijaytelevision) December 11, 2021
இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கமல்ஹாசன் பேசும் முதல் புரமோ வெளியாகியுள்ளது. அதில், பாவனி விவகாரத்தை பற்றி இன்று ராஜூ மற்றும் சிபி மற்ற ஹவுஸ்மேட்ஸுக்கு பாடம் எடுக்க போவதை, இதுத் தொடர்பாக விவாதிக்க போவதை கமல்ஹாசன் உறுதி செய்துள்ளார். வெளியான சில மணி நேரத்திலே இந்த புரமோ ட்ரெண்டாக தொடங்கியுள்ளது., அதே போல் பிக் பாஸ் 5 ல் இதுவரை எட்டு போட்டியாளர்கள் வெளியேறியுள்ள நிலையில் இந்த வாரம் வெளியேறப் போவது யார் என்பது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.