விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சி யின் 5வது சீசன் தொடங்கி வெற்றிகரமாக 11வது வாரத்தை எட்டியுள்ளது. இந்த சீசனில் இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபிநய் வாடி, சின்ன பொண்ணு, பாவ்னி, நாடியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர். மேலும் சஞ்சீவ், அமீர் வைல்டு கார்டு எண்ட்ரியாக வருகை தந்துள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் இதுவரை,, நாடியா, அபிஷேக் ராஜா, சின்ன பொண்ணு, ஸ்ருதி, மதுமிதா, இசைவாணி, ஐக்கி பெர்ரி, இமான் அண்ணாச்சி ஆகியோர் குறைந்த வாக்குகள் பெற்றதன் அடிப்படையில் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
தாய்மை ஒரு பக்கம்.. தொழில் பக்தி ஒரு பக்கம்.. பாரதி கண்ணம்மா வெண்பாவுக்கு குவியும் பாராட்டுக்கள்!
இதனால் தற்போது இந்த நிகழ்ச்சியில் ராஜு ஜெயமோகன், பிரியங்கா, அபிநய் வாடி, பாவ்னி, வருண், அக்ஷரா, தாமரை செல்வி, சிபி, நிரூப், சஞ்சீவ் மற்றும் அமீர் ஆகிய 11 போட்டியாளர்கள் உள்ளனர். இவர்களில் ராஜு, பிரியங்கா, அபிநய், பாவ்னி, வருண், அக்ஷரா ஆகியோர் இந்த வார நாமினேஷன் லிஸ்டில் உள்ளனர். இவர்களில் இந்த வாரம் வெளியேறப்போவது யார் என்ற எதிர்ப்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.
இந்தநிலையில் இன்று வெளியான முதல் ப்ரோமோவில், வீட்டில் இருப்பவர்கள் என்ன பத்தி என்ன சொன்னாலும் மக்கள் என்னை காப்பாற்றி விடுவார்கள் என சிலர் நினைத்து கொண்டிருக்கின்றனர் என கமல் கூறுகிறார். ஆனால் இந்த தைரியம் தற்போது பயமாக மாறி இருக்கிறது, அதுகுறித்து இன்று பேசுவோம் என கூறும் காட்சிகள் இருந்தது.
பிக்பாஸ் அமீரின் வாழ்க்கையில் இப்படியொரு சோகமா? சிறுவனாக இருந்தபோதே கொலை செய்யப்பட்ட தாய்!
இந்தநிலையில் தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில், அக்ஷ்ராவிடம் கேள்வி எழுப்பும் கமல், இன்னும் 4 வாரங்களே இருக்கிறது, பிரியங்கா குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என கேட்கிறார். அதற்கு அக்ஷ்ரா, தேவைப்படாத நேரத்தில் கூட அனைத்து விஷயங்களிலும் தன்னை ஈடுபடுத்தி கொள்கிறார்.அதாவது நமக்கு வந்தால் ரத்தம் அடுத்தவர்களுக்கு வந்தால் அது தக்காளி சட்னி என்பது போல இருக்கிறார் என கூறுகிறார். இதனை தொடர்ந்து இந்தவார போட்டியில் மட்டுமா? என கமல் கேட்க, இல்லை ஆரம்பத்தில் இருந்தே அவர் இப்படித்தான் என அக்ஷ்ரா கூறும் காட்சிகள் உள்ளது.
இந்த வாரம் நடைபெற்ற டாஸ்க் ஒன்றில் ராஜு - அக்ஷ்ரா இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது ராஜுவுடம் வாக்குவாதத்தில் இருந்த அக்ஷ்ரா, ஆங்கிலத்தில் தொடர்ந்து பேசினார். இதனை பார்த்த பிரியங்கா தமிழில் பேசுமாறு கூற, கடுப்பான அக்ஷ்ரா திட்டிவிட்டு பாத்ரூம் ஏரியாவிற்கு சென்று விட்டார். இதுகுறித்து இன்று கமல் விவாதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.