ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

பிக் பாஸ் : பாவ்னி, அபிநய் ‌‌‌மற்றும் அமீர் விஷயத்தில் மீண்டும் எல்லை மீறும் கேள்விகள்!

பிக் பாஸ் : பாவ்னி, அபிநய் ‌‌‌மற்றும் அமீர் விஷயத்தில் மீண்டும் எல்லை மீறும் கேள்விகள்!

அபிநய் மற்றும் பாவனி  பற்றி யாருமே பேச கூடாது என்று ஏற்கனவே நிகழ்ச்சித் தொகுப்பாளரான கமல்ஹாசன் ஒரு முற்றுப்புள்ளி வைத்து விட்ட நிலையில், மீண்டும் அதை பாவ்னி தொடங்கியுள்ளது அதிர்ச்சி அளித்துள்ளது.

அபிநய் மற்றும் பாவனி  பற்றி யாருமே பேச கூடாது என்று ஏற்கனவே நிகழ்ச்சித் தொகுப்பாளரான கமல்ஹாசன் ஒரு முற்றுப்புள்ளி வைத்து விட்ட நிலையில், மீண்டும் அதை பாவ்னி தொடங்கியுள்ளது அதிர்ச்சி அளித்துள்ளது.

அபிநய் மற்றும் பாவனி  பற்றி யாருமே பேச கூடாது என்று ஏற்கனவே நிகழ்ச்சித் தொகுப்பாளரான கமல்ஹாசன் ஒரு முற்றுப்புள்ளி வைத்து விட்ட நிலையில், மீண்டும் அதை பாவ்னி தொடங்கியுள்ளது அதிர்ச்சி அளித்துள்ளது.

  • 2 minute read
  • Last Updated :

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் டிக்கெட் டு பினாலே டாஸ்க் பரபரப்பாக நடந்து வருகிறது. 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக் பாஸ் தமிழ் சீசன் 5, தற்போது இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இறுதி கட்ட போட்டியில், ராஜு ஜெயமோகன், பிரியங்கா, பாவ்னி, தாமரை செல்வி, சிபி, நிரூப், சஞ்சீவ் மற்றும் அமீர் ஆகிய 8 போட்டியாளர்கள் உள்ளனர்.

டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்கில் கடுமையான போட்டியாளராக நிரூப் இருப்பார் என்று எதிர்பார்ப்பு இருந்தது. யார் இந்த டிக்கெட்டை பெற தகுதியானவர்கள் இல்லை என்பதை முடிவு செய்ய வேண்டும் என போட்டியாளர்களிடம் கேட்கப்பட்டது.அதற்கு அனைவரும் நிரூப்பை வெளியேற்றினார்கள். ரேசில் இருந்து முதல் ஆளாக வெளியேற்றப்பட்டார் என்பதே பலருக்கும் ஆதங்கமாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கிறது. அதற்கு அடுத்ததாக, முட்டை உடைக்கும் போட்டியில், தாமரை மற்றும் பாவனி இருவரும் வெளியேறினர். நேற்றைய டாஸ்க்கில், பிரியங்கா மற்றும் ராஜு வெளியேறினார்கள். தற்போது, டிக்கெட் டு ஃபினாலே ரேஸில் சிபி, அமீர் மற்றும் சஞ்சீவ் ஆகிய மூவரும் உள்ளனர். இதில் சஞ்சீவ் மற்றும் அமீர் இருவருமே வைல்டு கார்டு என்ட்ரியாக வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே வெளியான முதல் புரோமோவின் படி, TTF போட்டியில் இருந்து வெளியேறிய ஒவ்வொரு போட்டியாளருக்கும் கேள்விகள் கேட்கப்படும். அந்த கேள்விக்கு வீட்டில் இருக்கும் போட்டியாளர்களும், கேள்வி கேட்கப்பட்ட TTF ரேசில் இருக்கும் போட்டியாளர்களும் ஒரே மாதிரியான பதில் அளித்தால், அவர்கள் ஒரு படி முன்னேறலாம். விரைவாக சரியான பதில்களை சொல்லி, எல்லைக் கோட்டைத் தொடும் இரண்டு போட்டியாளர்கள் அடுத்த இறுதி கட்ட போட்டிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். போட்டியாளர்கள் பூசி மெழுகாமல் எவ்வளவு நேர்மையாக பதில் சொல்கிறார்கள் என்பது இன்றைய டாஸ்க்கில் தெரிய வரும்.

இதையும் படிங்க.. பிக் பாஸில் ஓயாத நிரூப் - பிரியங்கா சண்டை.. வெளியேற போவது யார்?

தற்போது வெளியான இரண்டாவது புரோமோவில், பாவனி மற்றும் பிரியங்கா இருவருமே அதிர்ச்சி அளிக்கக்கூடிய கேள்விகளை கேட்டுள்ளனர்.

அபிநய் மற்றும் பாவனி பற்றி யாருமே பேச கூடாது என்று ஏற்கனவே நிகழ்ச்சித் தொகுப்பாளரான கமலஹாசன் ஒரு முற்றுப்புள்ளி வைத்து விட்ட நிலையில், மீண்டும் அதை பாவனி தொடங்கியுள்ளது அதிர்ச்சி அளித்துள்ளது. அபிநய்யைப் பற்றி தவறான எண்ணத்தை அமீர் தான் இன்ஃப்ளூயன்ஸ் செய்தார் என்று பாவனி போட்டியின் கேள்வியாக கேட்டார். இது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த கேள்விக்கு ராஜு இதைப்பற்றி யாரும் பேசக்கூடாது என்று சொல்லி இருக்கிறார்களே, ஆனால் வேறு கேள்வியை கேளுங்கள் என்று பாவனியிடம் கூறிய போதும், இது என்னுடைய இஷ்டம் நான் அப்படிதான் கேட்பேன் என்று பாவனி பதில் சொல்லியுள்ளார். அதைத்தொடர்ந்து பிரியங்காவும், பாவனியின் மேல் அமீர் கொண்ட அன்பு ஒரு ஸ்ட்ரேட்டஜி தானா என்ற கேள்வியை கேட்டுள்ளார்.

இதையும் படிங்க.. நடிகையின் வீட்டிற்குள் திடீரென புகுந்த பாம்பு - ஓட்டம் பிடித்த முதியவர்கள்!

நேற்றைய பலூன் டாஸ்க்கிலும், தான் வெற்றி பெறுவதற்காக பாவ்னி மீது இருக்கும் அன்பை அமீர் ஆயுதமாக பயன்படுத்தி கொள்வதாக கூறினார் பிரியங்கா. தற்போது, அந்த அன்பையே ஸ்ட்ரேட்டஜியா என்று கேள்வி எழுப்பியுள்ளார். நேற்று, பாவனி மீது இருக்கும் அன்பு வேறு, நான் விளையாட வந்திருப்பது வேறு என கூறிய அமீர், இன்று என்ன பதில் சொல்லப்போகிறார் என்று தெரியவில்லை.

தற்போது வெளியான புரோமோ இங்கே.

' isDesktop="true" id="652453" youtubeid="DUGpN0GUsiM" category="tamil-nadu">

வெளியாகியுள்ள புரோமொவின் படி, அமீர் கொஞ்சம் பின்தங்கி இருப்பதாகத் தெரிகிறது. கடந்த மூன்று நாட்களாக பரபரப்பாக நடைபெற்று வந்த இந்த டாஸ்க்கில், கோல்டன் டிக்கெட்டை வெல்லப் போவது யார் என்பது நாளை தெரிந்துவிடும்.

First published: